Loading ...
Sorry, an error occurred while loading the content.

FOSS week in Srilanka - Press release

Expand Messages
  • மயூ mauran
    மென்பொருள் விடுதலை நாள் இனை நினைவுகூருமுகமாக இலங்கை
    Message 1 of 1 , Sep 2, 2005
    • 0 Attachment
      "மென்பொருள் விடுதலை
      நாள்" இனை
      நினைவுகூருமுகமாக
      இலங்கை
      அரசாங்கத்தினால்,
      செப்டெம்பர் 5ம்
      திகதிமுதல் 11ம்
      திகதி வரையான
      காலப்பகுதி தளையறு
      மற்றும் திறந்த
      ஆணைமூல மென்பொருள்
      வாரமாக (Free and Opensource Software week)
      பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
      இலங்கை லினக்ஸ்
      பயனர் குழுமம் (LKLUG),
      இலங்கை மென்பொருள்
      நிறுவகம் (LSF), தகவல்
      தொடர்பாடல்
      தொழிநுட்ப
      முகவరాబ్మైராண்மை
      நிலையம் (ICTA),
      கொழும்புப்
      பல்கலைக்கழக கணினி
      இயல் கல்வியகம் (UCSC),
      ஜப்பானைக்
      கணினிமயப்படுத்துவதற்கான
      பன்னாட்டு
      கூட்டமைப்பு
      நிலையம் (CICC) ஆகியன, 5ம்
      திகதி முதல் 11ம்
      திகதிவரை
      தொடர்ச்சியான பல
      நிகழ்ச்சிகளை
      ஒழுங்குபடுத்தியுள்ளன.


      தளையறு மற்றும்
      திறந்த ஆணைமூல
      மென்பொருட்களை
      உருவாக்குதலில்
      தமது உழைப்பினை
      செலுத்துவோரை
      மேன்மைப்படுத்துமுகமாகவே
      "மென்பொருள் விடுதலை
      நாள்"
      பிரகடனப்படுத்தப்பட்டது.
      பரவலாக்க
      செயற்றிட்டங்கள்,
      பாடசாலைகள்
      பல்கலைக்கழகங்களுக்கான
      இலவச
      கருத்தரங்குகள்
      போன்றவற்றை
      ஒழுங்குபடுத்துவதன்மூலம்
      உலகம்தழுவிய
      கொண்டாட்டங்களில்
      உள்ளூர் திறந்த
      ஆணைமூல சமுதாயமும்
      இணைந்துகொள்கிறது.

      இதுபற்றி இலங்கை
      லினக்ஸ் பயனர்
      குழுமத்தைச்சேர்ந்த
      பேசவல்ல
      உறுப்பினரொருவர்
      கருத்து
      தெரிவிக்கையில்,
      "உலகம் திறந்த ஆணைமூல
      மென்பொருட்களை
      நோக்கி நகர்கிறது.
      தகவற் தொழிநுட்ப
      தொழிற்துறையினுள்
      நிகழும் தெளிவான
      இவ்வளர்ச்சி,
      எதிர்கால உலகம் எதனை
      கையகப்படுத்தப்போகிறது
      என்பதை காட்டுகிறது.
      ஆனால்
      துரதிஷ்டவசமாக
      மரபான, யதார்த்தமற்ற
      காரணங்களால்
      உள்ளூர் தகவற்
      தொழிநுட்ப
      நிறுவனங்கள் திறந்த
      ஆணைமூல
      மென்பொருட்களை
      நோக்கி நகர்வதற்கு
      பயப்படுகின்றன.
      நிகழவிருக்கும்
      கருத்தரங்குகளும்
      செயலமர்வுகளும்
      இத்தகைய
      சந்தேகங்களுக்கெல்லாம்
      பதிலளிக்கும்.
      இலங்கை சரியான
      திசையை நோக்கி
      நடைபோட
      ஆரம்பிக்கும் என
      எதிர்பார்க்கிறோம்."
      என்றார்.

      பன்னாட்டு தளையறு
      மற்றும் திறந்த
      ஆணைமூல மென்பொருள்
      கொள்கை
      வகுப்பாளர்கள்,
      மதியுரைஞர்கள்,
      மென்பொருள்
      உருவாக்குனர்கள்,
      முதன்மை தகவல்
      அதிகாரிகள்(CIO)
      கல்விச்சமுதாயம்,
      பாடசாலைகள், இலங்கை
      மக்கள் எனும்
      பல்வேறுதரப்பினருக்கும்
      பயன்படக்கூடிய
      வகையில்
      நிகழ்ச்சிகள்
      ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.


      இலங்கைக் கம்பனிகள்,
      இச்சந்தர்ப்பத்தை,
      ஆலோசனைகள்,
      மதியுரைகளை பெற
      பயன்படுத்திக்கொள்வதோடு
      அதன்மூலம், 19
      நாடுகளின்
      பிரதிநிதிகளிடமும்,
      உலக அளவில்
      அறியப்பட்ட திறந்த
      ஆணைமூல
      முன்னோடிகளிடமும்
      கவன ஈர்ப்பை
      பெற்றுக்கொள்ளலாம்.

      பொதுமக்களுக்கும்,
      தனியாருக்கும்,
      அவர்கள் தமது தகவற்
      தொழிநுட்ப
      உட்கட்டமைப்பில்
      திறந்த ஆணைமூல
      மென்பொருட்களை
      உள்வாங்கிக்கொள்வதால்
      பெறக்கூடிய
      நன்மைகள் பற்றி
      அறிவூட்டுவதே
      இந்நிகழ்வின்
      அடிப்படை
      நோக்கமாகும். இது,
      உள்ளூர் வர்த்தக
      சேவைகள் உலகலாவிய
      தளையறு மென்பொருள்
      வணிகர்கள் ஆகியோர்
      தளையறு மற்றும்
      திறந்த ஆணைமூல
      மென்பொருட்களை
      மையப்படுத்தி
      இணைந்துகொள்வதை
      ஊக்குவிக்கும். இதன்
      மூலம் எமது
      தேசத்திலிருந்து
      வெளிச்செல்லும்
      பணத்தின் தேறிய
      பாய்ச்சலை
      குறைத்துக்கொள்ளவும்
      முடியும்.

      இநிகழ்வுகளில்
      முக்கியமான
      நிகழ்ச்சி தளையறு
      மற்றும் திறந்த
      ஆணைமூல மென்பொருள்
      உருவாக்குனர்கள்
      மாநாடாகும்.
      இம்மாநாடு, LAMP என
      அறியப்படும் Linux, Apache,
      MySQL, PostgreSQL, Perl, PHP, Python போன்ற
      திறந்த ஆணைமூல
      தொழிநுட்பங்கள்
      பற்றிய
      தொடர்ச்சியான
      கருத்தரங்குகளை
      கொண்டிருக்கும்.

      தளையறு, மற்றும்
      திறந்த ஆணைமூல
      மென்பொருள்
      உருவாக்கத்தில்
      ஈடுபடுவோரே
      இம்மாநாட்டின்
      பேச்சாளர்களாக
      இருப்பர். Rasmus Lerdorf (PHP
      இன் தந்தை), Michael Tiemann (Redhat
      நிறுவனத்தின் தலைமை
      தொழிநுட்ப
      உத்தியோகத்தர்), Bruce
      Momjian (PostgreSQL
      உருவாக்கக்குழுவின்
      ஆரம்பகர்த்தாக்களுள்
      ஒருவர்), Martin Michelmayr (Debian
      செயற்றிட்ட தலைவர்),
      Greg Stein (Apache
      நிறுவனத்தின்
      தலைவர்), Sam Ruby (IBM), David Axmark
      (MySQL
      ஆரம்பகர்த்தாக்களுள்
      ஒருவர்), Dr Sanjiva Weerawarna (OSI Board
      Member / Web Services Co-Author), Alan Cox
      (லினகஸ் கேர்னல்
      குழுவின்
      தலைவர்)ஆகியோர்
      இம்மாநாட்டில்
      கலந்துகொள்கின்றனர்.

      அதிநவீன
      தொழிநுட்பத்தின்
      ரகசியங்களை இது
      வெளிக்கொணரும் என்ற
      நம்பிக்கையுடன்
      தகவல் தொடர்பாடல்
      தொழிநுட்ப
      முகவராண்மை நிலையம்
      (ICTA)
      இந்நிகழ்ச்சித்தொடருக்கு
      ஆதரவளிக்கவிருக்கிறது



      Media Release FOSS 2005

      A "Free and Open Source Software week" has been
      declared by the Government of Sri Lanka to commemorate
      the "Software Freedom Day". The Lanka Linux User Group
      (LKLUG), Lanka Software Foundation (LSF), Information
      Communication Technology Agency (ICTA), University of
      Colombo School for Computing (UCSC) and Center of the
      International Cooperation for Computerization of Japan
      (CICC) have organized a series of events starting on
      the 5th of September to the 11th.

      The "Software Freedom Day" has been declared to pay
      tribute to those who put their efforts in building
      free and open source software. The local open source
      community joins the global celebrations as they
      conduct promotional campaigns and free seminars to
      schools and universities.

      A spokesman from LKLUG said, "The world is moving
      towards open source software, the significant growth
      in the IT industry indicates what the future would
      hold. But unfortunately due to mythical and
      unrealistic reasons most of the local IT companies are
      fear of making a move towards open source software. We
      hope the workshops and seminars would answer those
      dubious issues and hope Sri Lanka will start moving
      towards the right direction".

      The events are organized to benefit the different
      target audiences of international FOSS policy makers,
      FOSS advocates/developers, CIOs, Academia/Schools and
      the Sri Lankan public.

      Sri Lankan companies can utilize this opportunity to
      get expert advocacy and consultancy as they will be
      exposed to international delegates from 19 economies
      and internationally recognized leaders in Open Source.


      The primary objective of this event is to educate the
      public, private and civil society to benefit from
      adopting Open Source in their IT infrastructure. These
      will encourage local commercial services and global
      FOSS vendors companies to build up around FOSS,
      reducing the net flow of cash out of the nation.

      The key event of the convention is Free and Open
      Source Software (FOSS) Developer Conference which
      consists of a series of seminars on Open Source
      Technologies such as Linux, Apache, MySQL, PostgreSQL,
      Perl, PHP and Python commonly known as LAMP.

      The FOSS Developer Conference will be addressed by
      those who are involved in developing them: Rasmus
      Lerdorf (Father of PHP), Michael Tiemann (Redhat CTO),
      Bruce Momjian (co-founder of PostgreSQL development
      group), Martin Michelmayr (Debian Project Lead), Greg
      Stein (Apache Chairman), Sam Ruby (IBM), David Axmark
      (MySQL co-founder), Dr Sanjiva Weerawarna SRI LANKA
      F.O.S.S. CONVENTION 2005 (OSI Board Member / Web
      Services Co-Author) and a leader of the Linux kernel
      team, Alan Cox.

      The Information Communication Technology Agency (ICTA)
      will be facilitating this event in the hope it will
      unleash the mysteries behind bleeding edge
      technologies.



      __________________________________________________
      Do You Yahoo!?
      Tired of spam? Yahoo! Mail has the best spam protection around
      http://mail.yahoo.com
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.