Loading ...
Sorry, an error occurred while loading the content.
 

அடுக்குவசனம் = இறைய னார் அகப்பொருளுரை

Expand Messages
 • N D Logasundaram
  * இறையனார் அகப்பொருளுரையில் ஓர்* *
  Message 1 of 1 , Mar 8, 2012
   * இறையனார் அகப்பொருளுரையில் ஓர்*
   * சிறு அடுக்குவசனப் பகுதி*
   * *நூ. த. லோகசுந்தர முதலி – மயிலை
   **
   <http://www.vallamai.com/wp-content/uploads/2012/03/5TAM002.jpg>இறையனார்
   அகப்பொருளுரை என்னும் ஓர் நூல் பற்றிப் பலர் கேள்வியுற்றிருப்பர்.
   மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தமை மற்றும் முதல் இரண்டு சங்கங்கள் கடல்
   கொள்ளப்பட்டன போன்ற வரலாற்றுச் செய்திகளை அளித்தது இந்த இறையனார்
   அகப்பொருள்உரை என்பதையும் இவ் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய ஓர் சிறப்புப்
   பகுதி மட்டும் பள்ளிப்பாட நூல்களிலும் பலரால் எடுத்துக்காட்டாகவும்
   பார்த்திருப்பர்.

   *“அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வற்கடம் சென்றது,*
   * செல்லவே, பசிகடுகதுலும், அரசன் சிட்டோரை எல்லாம் கூவி,” . . .*
   எனச்செல்லும்.
   ஆலவாயப்பனாலேயே செய்யப்பட்ட அகப்பொருள் நூல் >>*இறையனார் களவியல்*<<
   என்கிறது உரை. (இதன் நூற்பாக்களைக் கணினி வழிக் காணலாம்

   http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0301.pdf


   ஆனால் அதன் கண்ணுள்ள மிக நீண்ட உரை முழுதும் பெரு நூலாக ஓரிருவரால்
   வெளியிடப் பட்டிருந்தாலும் அதனைப் பார்த்தோர், உட்புகுந்தோர், படித்தோர்
   மிகச்சிலரே. ஒவ்வொரு அகப்பொருள் துறைக்கும் அதனில் வைக்கப்பட்டுள்ள
   எடுத்துக்காட்டுப் பாடல்கள் உரை ஆசிரியராலேயே இயற்றப்பட்டிருக்கலாம்
   அவற்றைத் தொகுத்து ஓர் தனி நூலாகவும் வெளி வந்துள்ளது.
   (325+ பாடல்கள் – பாண்டிக் கோவை)

   http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0336.pdf


   தமிழ்த் திரைப்பட உலகத்தில் 56-57 ஆண்டுகளுக்கு முன் (1955-56)
   *அடுக்குவசனம்*
   எனும் ஓர் புதுமை வந்து மக்களை வியக்க வைத்தது.

   இறையனார் அகப்பொருளுரையில் உள்ள
   *7 ம் நூற்றாண்டு பழமையான வசனநடை*யைப்
   (சில சிறு பகுதி) படிப்போர் இதே வகை வியப்பெனும்
   மெய்ப்பாடினை எய்துவர்.
   அவ்வகை,
   தமிழ்ச்சுவை மிகு ஓர் உரைநடையின் பகுதி *காண்க, கேட்க*
   (ஒளிப்பதிவினியும் உடன் கேட்க
   முதலில் ஒலிக்கோப்புத் திறக்க வழி செய்துவிட்டு கீழே சென்று
   **.wma* கோப்பினைச் சொடுக்கிக்கொண்டு பார்க்கவும்)

   சந்தணமும்
   சண்பகமும்
   தேமாவும்
   தீம்பலவும்
   ஆசினியும்
   அசோகும்
   கோங்கும்
   வேங்கையும்
   குரவமும் - - - - - - - - - *விரிந்து*

   நாகமும்
   திலகமும்
   நறவும்
   நந்தியும்
   மாதவியும்
   மல்லிகையும்
   மவ்வலொடு - - - - - - - - - *மணம்கமழ்ந்து*

   பாதிரியும்
   பாவைஞாழலும்
   பைங்கொன்றையொடு *- - - - பிணியவிழ்ந்து*

   பொறிப்புன்கும்
   புன்னாகமும்
   முருக்கொடு - - - - - - - - - - - - - *முகைசிறந்து*

   வண்டறைந்து
   தேனார்ந்து
   வரக்குயில்கள் - - - - - - - - - - - - *இசைபாட*

   தண்தென்றல்
   இடைவிராய்
   தனியவரை
   முனிவுசெய்யும் - - - - - - - - - - - *பொழிலது நடுவண்*
   ஓர் மாணிக்கச் செய்குன்றின்மேல்
   விசும்பு துடைத்து
   பசும்பொன் பூத்து
   வண்டு துவைப்பத்
   தண்தேன் துளிப்பதோர்
   நறுமலர் - - - - - - - - - - - - - - *வேங்கை கண்டாள்*

   *கண்டு,*

   பெரியதோர் காதல் – களிகூர்ந்து
   தன்செம்மலர்ச் சீரடிமேல்
   சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப
   அம்மலரணி கொம்பர்
   நடைகற்பதென நடந்துசென்று
   நறைவிரி வேங்கை - - - - - - - - *நாள்மலர் கொய்தாள்*

   *கொய்த இடத்து*,
   மரகதமணி – விளிம் படுத்த
   மாணிக்கச்சுனை – மருங்கின தோர்
   மாதவிவல்லி – மணி மண்டபத்து
   போதுவேய்ந்த – பூநாறு கொழுநிழற்கீழ்
   கடிக்குருக்கத்திக் – கொடி பிடித்து
   தகடுபடுபசும்பொன் – சிகரங்களின் முகடுதொடுத்து
   ஞான்றுவந்து – இழிதரும் அருவி
   பொன்கொழித்து – மணி வரன்றி
   மாணிக்கத்தொடு – வயிரம் உந்தி

   அணிகிளர்அருவி – ஆடகப்பாறைமேல்
   அதிர்குரல் முரசின் – கண்இரட்ட
   வண்டும் தேனும் – யாழ் முரல
   வரிக்குயிலும் – கிளியும் பாட
   தண்தாது தவிசுபடத் – போர்த்ததோர்
   பளிக்குப்பாறை – மணித்தலத்து மிசை
   நீலஆல வட்டம் – விரித்தார் போலத்
   தன்கோலக் கலாவம் – கொளவிரித்து
   முளையிள ஞாயிற்று – இளவெயில் எறிப்ப
   ஓர்இளமயில் ஆடுவது – நோக்கி நின்றாள்
   > > > > > > > > > > > > > > > > >
   என பெருவழிச் செல்கின்றது:
   ஓர் தலைவி தலைவனை
   முதல்முதலாகச் சந்திக்க நேரும் களப் பகுதி


   [Non-text portions of this message have been removed]
  Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.