Loading ...
Sorry, an error occurred while loading the content.

குவைத்தில் முதல ் முறையாக மாபெரு ம் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு பட் டிமன்றம்

Expand Messages
  • Khaleel Baaqavee, K-Tic
    குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்தில் முதல்
    Message 1 of 2 , Feb 10, 2012
    • 0 Attachment
      குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்தில் முதல் முறையாக
      ஏற்பாடு செய்த மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு பட்டிமன்றம்!
      குவைத் அரசு சிறப்பு விருந்தினராக சென்னை பேராசிரியர்
      மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ நடுவராக பங்கேற்று சிறப்புரை!!
      -------------------------------------------

      குவைத் வரலாற்றில் முதல்முறையாக சிறப்பு இஸ்லாமியப் பட்டிமன்றம்!
      7ம் ஆண்டு "K-Tic பிறை செய்திமடல்" ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!!
      குவைத் இந்தியத் தூதரக அதிகாரியின் வாழ்த்துரை!!!

      பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

      எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும்,
      சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், பிப்ரவரி (2012) மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மூன்று நாட்கள் நான்கு இடங்களில் பல்வேறு
      தலைப்புகளில் நடத்தியது.

      அவற்றில் ஒரு நிகழ்ச்சியாக03.02.2012 வெள்ளிக்கிழமை இரவு 7:15 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 11:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப, 'அல்-ஷாயா' பள்ளிவாசலில் குவைத் வரலாற்றில் முதல் முறையாக குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற முஸ்லிம்களின் பின்னடைவுக்குப் பெரிதும் காரணம்... ஆன்மிகப் பலமின்மையா? அதிகாரப் பலமின்மையா? என்ற தலைப்பில் சிறப்புப்
      பட்டிமன்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

      சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு பட்டிமன்ற நிகழ்ச்சியில் தமிழகத்திலிருந்து வருகை தந்த சென்னை ரஹ்மத் அறக்கட்டளை பதிப்பகத்தின் மொழிப்பெயர்ப்பாளர் குழுவின் தலைவரும், இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகத்தின் தலைவரும்,  வேலூர் ஜாமிஆ அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுப்
      பல்கலைக்கழத்தின் முன்னாள் பேராசிரியரும், தமிழ் இஸ்லாமியப் பட்டிமன்றங்களின் நாயகருமான மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் 'கலமுல் மில்லத் (சமுதாயத்தின் எழுதுகோல்)' அ. முஹம்மது கான் பாகவீ ஹழ்ரத் அவர்கள் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நடுவராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.

      இளவல்M.N. அப்துல் பாஸித் இறைமறை குர்ஆனின் வசனங்களை கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைக்க, சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் A.K.S. அப்துல் நாஸர் தமிழிலும், ஆங்கிலத்திலும் வரவேற்புரையாற்றினார். தலைவரின் தலைமையுரைக்குப் பின் குவைத் இந்தியத் தூதரகத்தின் கலாச்சாரம், சமூக விவகாரங்கள் மற்றும் கல்விப் பிரிவின் முதன்மைச் செயலாளர் திரு M.K. மோஹன் அவர்கள்
      வாழ்த்துரை வழங்க, பட்டிமன்றத்தின் நோக்கம், வாதிடும் முறைகள், தலைப்பு குறித்த விளக்கம் போன்றவற்றை நடுவர் அவர்கள் விரிவாக எடுத்துரைக்க, பள்ளிவாசல் முழுவதும் மக்கள் நிரம்பியிருக்க பட்டிமன்றம் ஆரம்பமானது.

      சிறப்பு இஸ்லாமியப் பட்டிமன்றம்:

      முஸ்லிம்களின் பின்னடைவுக்குப் பெரிதும் காரணம் ஆன்மிகப் பலமின்மையே! என்ற அணிக்கு சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) மூத்த உறுப்பினர் மவ்லவீ S.A.K. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி தலைமையேற்க, அணியின் உறுப்பினர்களாக சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ M. ஜைனுல் ஆபிதீன் பாகவீ, சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) உறுப்பினர் மவ்லவீ S. ஹாஜா
      முய்னுத்தீன் உலவீ மற்றும் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் H.M. முஹம்மது நாஸர் ஆகியோர் பங்கேற்று சிறப்பான முறையில் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தனர்.

      இவர்களின் கருத்துக்களுக்கு எதிராக, முஸ்லிம்களின் பின்னடைவுக்குப் பெரிதும் காரணம் அதிகாரப் பலமின்மையே! என்ற அணிக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ தலைமையேற்க, அணியின் உறுப்பினர்களாக சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) மூத்த உறுப்பினர் மவ்லவீ A. செய்யது அபுதாஹிர் பாகவீ, சங்கத்தின் இளைஞர் அணி செயலாளர்
      மவ்லவீ அஃப்ழலுல் உலமா M.S. அப்துல் குத்தூஸ் ஹஸனீ மற்றும் கவிஞர் அல்ஹாஜ் M. ஷேக் ஹாதி மஸ்தான் ஆகியோர் பங்கேற்று சிறப்பான முறையில் தங்களின் கருத்துக்களை எடுத்து வைத்தனர். 

      இரு அணியினரும் தங்களின் கருத்துக்களுக்கு வலு சேர்ப்பதற்கு திருக்குர்ஆனின் வசனங்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள், வரலாற்றுச் சம்பவங்கள், அறிஞர்களின் வார்த்தைகள், நிகழ்கால நடப்புகள், புள்ளி விபரங்கள் மற்றும் ஆய்வறிக்கைகள் என பல்வேறு வகைகளில் ஆதாரங்களை பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

      இரு அணிகளும் தங்களின் வாதங்களை நிறைவு செய்தவுடன் பார்வையாளர்களும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்வதற்காக ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்பட்டு, அவர்களின் ஓட்டுகளும் நடுவரிடம் ஒப்படைக்கப்பட்டன. பட்டிமன்ற நிகழ்ச்சியில் பார்வையாளர்களையும் பங்கேற்க வைத்த செயற்பாடு கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு புதுமையான செயலாக இருந்தது மட்டுமில்லாமல் தங்களின்
      கருத்துக்களையும் எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பளித்த சங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டி மகிழ்ந்தனர். 

      இறுதியில், முஸ்லிம்களின் பின்னடைவுக்குப் பெரிதும் காரணம் அதிகாரப் பலமின்மையே! என்று நடுவர் தீர்ப்பளித்து அதை நிவர்த்தி செய்வதற்குண்டான வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்கள். 

      "K-Tic பிறை செய்திமடல்" ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு:

      குவைத்தின் முதல் தமிழ் இஸ்லாமிய மாத இதழான"K-Tic பிறை செய்திமடல்" இதழின்"7ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர்" வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

      குவைத் இந்திய மற்றும் இலங்கைத் தூதர்கள், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா A.E.M. அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹழ்ரத், தமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேரா. K.M. காதர் முஹ்யத்தீன் Ex. M.P., மற்றும் தேனீ நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் J.M. ஹாரூன் ரஷீத் M.P., ஆகியோரின் வாழ்த்துரைகள், அறிஞர் பெருமக்களின் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் என பல்வேறு
      சிறப்பம்சங்களுடன் 60 பக்கங்களில் வண்ணமயமாக உருவாக்கப்பட்ட ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலரை குவைத் இந்தியத் தூதரகத்தின் கலாச்சாரம், சமூக விவகாரங்கள் மற்றும் கல்விப் பிரிவின் முதன்மைச் செயலாளர் திரு M.K. மோஹன் அவர்கள் வெளியிட குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினர் மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ
      ஹழ்ரத் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

      சங்கத்தின் பொருளாளர் அல்ஹாஜ் M. ஜாஹிர் ஹுஸைன், நன்றியுரையாற்ற, சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் துஆ ஓத, கலந்து கொண்ட அனைவருக்கும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர், அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் தொகுப்பு, இரவு உணவு மற்றும் குவைத் கிட்கோ நிறுவனம் வழங்கிய சிற்றுண்டி பாக்கெட் வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே
      நிறைவுற்றது.

      இச்சிறப்புமிகு விழாவில் குவைத் வாழ் தமிழ் பேசும் மக்கள் முஸ்லிம்கள் மற்றும் சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கொள்கை, கட்சி, அமைப்பு, இயக்கம், அரசியல் வேறுபாடின்றி, தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் சுமார் 650 நபர்கள் வரை பங்கேற்று பயனடைந்தனர். 

      "காலத்திற்கேற்ற தலைப்பு" என்றும், "ஒரே தலைப்பில் பல்வேறு கருத்துக்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் பேசியது சிறப்பாக இருந்தது" என்றும், "அதிகமான ஆலிம்கள் பங்கேற்று விவாதம் செய்தது புதுமையாக இருந்தது" என்றும், "தொடர்ந்து இதுபோன்று பல தலைப்புகளில் பல கோணங்களில் மக்களுக்கு எடுத்துரைத்து, மார்க்கச் செய்திகள் அனைவருக்கும் சென்றடைய K-Tic சங்கம் முயற்சி செய்ய
      வேண்டும்" என்றும் கலந்து கொண்டவர்களின் பெரும்பாலானவர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து விட்டு சென்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

      நேரடி விமானச் சேவை தேவை:

      குவைத் விமான நிறுவனம் குவைத்திலிருந்து நேரிடையாக திருச்சி விமான நிலையத்திற்கு விமானச் சேவையை தொடங்குவதற்கும், இலங்கை விமான நிறுவனம் குவைத்திலிருந்து கொழும்பிற்கு செல்லாமல் நேரிடையாக சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கு விமானச் சேவையை தொடங்குவதற்கும் K-Tic சங்கம் எடுக்கும் முயற்சிக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதற்காக கையெழுத்து படிவத்தை
      விநியோகம் செய்து மக்களிடமிருந்து கையெழுத்துக்களும் பெறப்பட்டன.

      நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

      தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம்
      சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள். 
      -------------------------------------------------------------------------------------------------------
      Web & Media Wing,
      Kuwait Tamil Islamic Committee (K-Tic)
      Kuwait.
      Hotline: (+965) 97 87 24 82
      Emails : q8_tic@.../ ktic.kuwait@...
      Official Website : www.k-tic.com
      Yahoo Group : http://groups.yahoo.com/group/K-Tic-group
      Google Group : http://groups.google.com/group/q8tic

      ----------------
      என்றும் மாறா அன்புடன்...
      குவைத்திலிருந்து...
      பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
      www.k-tic.com / www.mypno.com
      www.ulamaa-pno.blogspot.com
      http://www.facebook.com/khaleelbaaqavee

      [Non-text portions of this message have been removed]
    • Khaleel Baaqavee, K-Tic
      குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்தில் முதல்
      Message 2 of 2 , Feb 10, 2012

      Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.