Loading ...
Sorry, an error occurred while loading the content.

மழலைகள் 0905 செய்தி மலர்

Expand Messages
 • AKR
  Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all http://www.mazhalaigal.com/ The website for artwork, stories
  Message 1 of 1 , Jul 10, 2009
  • 0 Attachment
   
   Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all

   The website for artwork, stories and poems to enhance personality of children as well as others and a tutorial to
   produce Tamil contents in computers
    
   அழகி

   Guidance to installation and usage of Azhagi Tamil word processing and transliteration software.
    
   இறைவனைக் காண்போம் - 14 - நடராஜன் கல்பட்டு

   பக்கி பகலில் படுத்துறங்கி இரவில் வெளிக் கிளம்பும் விட்டில் பூச்சிகளைப் பிடித்துத் தின்னும் ஒரு பறவை. பறந்து கொண்டு
   இருக்கும் போதே பூச்சிகளைப் பிடிக்க லாயக்காக அகலமான வாயினையும், அலகின் இரு பக்கங்களிலும் பூனைக்கு மீசை முளைத்திருப்பதைப் போன்ற ரோமங்களையும் கொண்டது பக்கி.
    
   கிருஷ்ணா முகுந்தா - 01 - கீதா சாம்பசிவம்

   நம்ம பேரிலே ஒரு பெரிய குற்றச்சாட்டு இருக்கே. பிள்ளையார், அவரோட அப்பா சிவனைப் பற்றியும், சிவனடியார்கள் பத்தியும்,
   முருகன், ஐயப்பன், போன்ற இறைவர்களைப் பற்றி மட்டுமே எழுதுவாங்க. விஷ்ணு பக்தர்களைக் கண்டுக்கவே மாட்டாங்கனு. அதை மாத்திடறதுனு முடிவு பண்ணிட்டோம்.
    
   பயிற்சி - தமிழ்த்தேனீ

   மனப்பயிற்சி முறையாப் பண்ணாலே உடற்பயிற்சி தானே வரும், அதுனாலே மனசுலே நாம முன்னுக்கு வரணும், நல்ல
   பதவிகள் எல்லாம் வகிக்கணும், நாட்டுலெ எல்லாரும் பாராட்றா மாதிரி நாமளும் ஆகணும் அப்பிடீன்னு முடிவு எடுத்து, அதுக்கு வேணுங்கிற பயிற்சியை ஆரம்பிச்சு, இடைவிடாம செயல்பட்டாலே எல்லாதையுமே நாம அடையலாம்.
    
   அருள் மணக்கும் அவதாரங்கள் - A.K. Selvadurai

   அழியும் பனி வெண்திரை புரட்டும் ஆழிவயிறு கிடங் கெழுந்து கிழிய நெடுமால் வரை துளங்கிக் கீழ்வீழந்திடலும் தனிநின்று
   சுழலும் பசும்பொன் கிரிமுதுகு சொறிந்தாங்கணிதின் இளநறவம் முழுகும் துளவோன் மோட்டானடை யுருவம் எடுத்துத் தாங்கினனால்
    
   அறுபத்து மூவர் - 13 - கீதா சாம்பசிவம்

   நடையிலே தள்ளாட்டம், சொல்லிலே தடுமாற்றம், வெண்ணிற முடி மட்டுமில்லாமல் உடலெங்கும் வெண்ணீறணிந்த கோலம், 
   கையிலே கைத்தடி, வெண்ணிற உடை, மார்பிலே முப்புரிநூல், இவர் என்ன சிவனடியாரா? அல்லது ஆதிசிவனேயா?
    
   சங்கர விஜயம் - 2 - கீதா சாம்பசிவம்

   திராவிடர்களில் குஜராத்தில் உள்ள கூர்ஜரர்கள், மஹாராஷ்டிரத்தின் மஹாராஷ்டிரர், ஆந்திரர், கர்நாடகாவில் உள்ள மக்கள்,
   திராவிடர் என்ற மூலப் பெயருள்ள தமிழர்கள் ஆகியோர். இவர்களில் சேரநாட்டு மக்களும் அடங்குவார்கள்.
    
   பகவத்கீதா சாரம் - அசலம்

   இந்திரியங்கள் ஆத்ம ஞானத்திற்கு விரோதிகளாக உள்ளன. அவை நம் ஆத்ம ஸாக்ஷாத்க்காரத்தைத் தடை செய்ய வல்லமை
   பெற்றவை. அவை நம் ஆத்மீக வாழ்வின் வீழ்ச்சிக்கு ஹேதுவாகின்றன.
    
   வாழும் முறைமை - அசலம்

   பரதனும் சத்ருக்னனும் தங்கள் தாய்மாமன் அரண்மனைக்குச் சென்றிருந்தார்கள். அவர்களை வரவழைக்க ஆள் சென்றது.
   அவர்கள் வந்ததும், குழந்தைகள் அரண்மனையில் சோக நிலை தவழ்வதை உணர்ந்து தாயிடம் என்னவாயிற்று என்று கேட்டனர்.
    
   ராமாயணம் - 8 - பிள்ளையார் பாட்டி

   இன்று முதல் குருவானவர் மெளன விரதம் அனுஷ்டிப்பதால், நீங்கள் இருவரும் இன்று முதல் ஆறு இரவுகள் எச்சரிக்கையாக
   இருந்து இந்த யாகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பதாய்ச் சொன்னார்கள்.
    
   எத்தனைப்பொன் - இணையப் பாட்டி

   அவனும் தேவியை நமஸ்கரித்துவிட்டு, தாயே நான் மிக ஏழ்மை நிலையிலே உள்ளேன். எனக்கு நீ நிறையப் பொன் தருவாயா?
   என்றான். உனக்கு எத்தனைப் பொன் வேண்டுமானாலும் தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை..
    
   அமெரிக்கா 20 - கீதா சாம்பசிவம்

   உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கும் முன்னர் பத்தொன்பது மாநிலங்கள் அடிமைகளை விடுவித்திருந்தன. அவை மைன்,
   வெர்மாண்ட், நியூஹாம்ப்ஷைர், மாசசூசெட்ஸ், ரோடே ஐலாண்ட், கனெக்டிகட், நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, ஓஹையோ, இண்டியானா, இல்லினாய்ஸ், மிக்சிகன், விஸ்கான்சின், மினசோட்டா, கான்சாஸ், ஐயோவா, ஒரேகான் மற்றும் கலிபோர்னியா ஆகியவை.
    
   பெருமை வாய்ந்த பிள்ளையார் - கீதா சாம்பசிவம்

   கணபதி என்ற சொல்லுக்கு அர்த்தத்தைப் பார்த்தோமானால் க அஞ்ஞானம், அறியாமை அகலுவதைக் குறிக்கும். ண
   மோக்ஷத்தைக் குறிக்கும் சொல், பதி சாக்ஷாத் அந்தப் பரம்பொருளைக் குறிக்கும். நம் அறியாமையை அகற்றி, நம்மை மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்லும் பரம்பொருளே கணபதி.
    
   Milkyway our Galaxy - Subramanian sharma

   Through a telescope the Milky Way galaxy has been found to be made up of countless individual stars that seem
   relatively close together.
    
   எங்க உலகம் ஆனந்தமானது - விழியன்

   சென்ற வருடம் குழந்தைகளை படம் பிடித்தபோது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…குழந்தைகளின் பெயர்கள்
   கிஷோர்,கவின்,கெளசிகா,மேத்யூ,ஜோசப்.
    
   சொந்தக்கார் - ஜெயஸ்ரீ ஷங்கர்

   நினைப்பு பொழப்பக் கெடுக்கும்ன்னு நமக்குத் தான் சொன்னாற் போல எப்டியாவது கார் வரணும் குறி சரியாய் காரில் விழ
   காயத்ரி மந்திரம் சொல்வது போல் நித்தம் பத்து வேளையும் கார் வேணும் மந்திரம்
    
   நினைத்துப் பார்க்கிறேன் - நடராஜன் கல்பட்டு

   எங்களுக்காகவே வாழ்ந்து தனது எழுபத்தேழில், “லக்ஷ்மி நான் இன்னோரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பாக்கறேன்” என்று
   வரப்போகும் எண்பதை நினைத்து என் அம்மாவிடம் விளையாட்டகச் சொல்லி...
    
   எண்பதாம் ஆண்டு நிறைவு - நடராஜன் கல்பட்டு

   வேண்டுவதும் நல்வாழ்வும் வடி வேலவன் அருளிடவே!  நீண்ட நெடுநாட்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்திடவே!!
    
   புதுக்கார் வாங்கலாமா? - தேனீ மாமா
    
   என் காரினால் பல கார் சரி செய்யும் நிறுவனங்களும் மற்றும் நடைபாதைப் பொறியாளர்கள் அனைவரும் முன்னுக்கு வந்தனர்,
   நானும் முன்னுக்கு வந்தேன்.
    
   ஒண்ணு கேக்கலாமுங்களா? - நடராஜன் கல்பட்டு

   போஸ்ட் ஆபீஸை விட்டு வெளியே வந்து ஸ்டேஷன் போகும் ரோடில் கால் வைக்க, “சார் ஒங்களெ ஒண்ணு
   கேக்கலாமுங்களா?” என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன்.
    
   ஒன்றை விட்டொன்று பற்றேல் - நடராஜன் கல்பட்டு

   மங்கை முகத்து மரு தன்னை முயல் எனக்கொண்டதோ என்றும் பாய்ந்திடும் கழுகெனக் கவ்வியதே கார் மேகம்.
    
   திரை இசைத் திலகம் - தமிழ்த் தேனீ
   http://www.mazhalaigal.com/entertainment/music/music-001/0905rkc_kv_mahadevan.php
   திறமைகள் இருந்தும் காலமும் நேரமும் ஒத்துழையாமையினால் பல கலைஞர்கள் குடத்திலிட்ட விளக்காய் அந்தக்
   குடத்தினுள்ளேயே தன்னுடைய ஒளி முழுவதையுமே வீசிக் களைத்து அப்படியே ஒளி மங்கிப் போயிருக்கிறார்கள்.
    
   முனிவர் கோபம் - வைரா

   மன்னன் பொறுமை இழந்தான்; கோபமுற்றான். அருகில் இறந்து கிடந்த ஒரு பாமபை எடுத்து, முனிவர் கழுத்தில் மாலையாகப்
   போட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.
    
   Pooja Iyer’s Diary - Pooja Iyer

   On one School Day, I was getting ready for school. When I was wearing lotion, I took accidentally Of course, too mush.
   So, Well, What to do with the extra lotion?
    
   ஒட்டியும், ஒட்டாமலும்! - காயத்ரி

   நாங்களோ இன்பத்தைக் கண்டு மகிழ்கிறோம். துன்பத்தைக் கண்டு துவண்டு போகிறோம். ஆனால் நீங்கள் பட்டும் படாமலும்
   வாழ்ந்து கொண்டிருக்கின்றிர்கள். இது எப்படி குருவே சாத்தியம்?
     
   எத்தனைப்பொன் - இணையப் பாட்டி

   நாம் யாதுகிரி குட்டாவிற்குப் போய் அங்கு இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரைப் பார்த்து ஆசிகள் பெறலாமா? ஹைதராபாத்தி
   லிருந்து சுமார் 69 கி.மீ. தூரத்தில் வாரங்கல்லுக்கு அருகிலும் இந்த லக்ஷ்மிநரசிம்மர் கோயில் இருக்கிறது.
    
   பகுத்துண்டு மகிழ்வோம் - வினைதீர்த்தான்

   இதனைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் முதியவரின் துனைவியாடம், ஏன் நீங்கள் உணவு அருந்தவில்லை? என்று
   கேட்டார். துனைவியார் நாங்கள் எதையும் பகிர்ந்து கொள்வோம் என்றார்.

   சரியான மருத்துவர் - வினைதீர்த்தான்

   மருத்துவரே, நான் மறுநாள் வேலைப்பளுவை எண்ணிக்கொண்டு 'கோட்டான்' போல இரவு முழுதும் துங்காமல்
   விழித்திருக்கிறேன். அதிகாலை குதிரைபோல எழுந்துகொள்கிறேன்...
    
   அடம் பிடிக்கும் விருந்தாளி - வினைதீர்த்தான்

   அரசியலைப் பற்றியோ வரலாறு அல்லது விஞ்ஞானத்தைப் பற்றியோ எல்லாவற்றுக்கும் விடைகள் வைத்திருந்தார். நடந்தது,
   நிகழ்நதது ஏன் எதிர்காலம் பற்றியும் நிறையச் சொல்லுவார்.
    
   குறள் மலர்கள் - செபரா

   தெள்ளுதமிழ்ப் பாடல்களில் திருவள்ளுவன் உரைத்தான்!
   தினமும் ஓர் திருக்குறளைத் தெரிந்து கொள்வாய் நெஞ்சே!!
    
   தொப்புள்கொடி உறவு - முத்து

   அற்றகுளத்து அருநீர்ப் பறவைபோல் அங்கே அவர்கள் ஒட்டிண்டிருக்கிறார்கள். நாம இங்கே பணத்துக்காக எல்லாத்தையும்
   மறந்துட்டு இந்த ஊருக்குத் தகுந்தமாதிரி நம்மளை நாமே மாத்திண்டு வாழ்ந்திண்டிருக்கோம். பணமில்லேன்னா வாழ்க்கை இல்லேன்னு ஆயிடுத்தே.
    
  Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.