Loading ...
Sorry, an error occurred while loading the content.

Reconstituting The Real 'KILZAVAN SETHUPATHI' (Tamil unicode)

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்கள்/நாட்டுத்
    Message 1 of 1 , May 1 5:43 PM
    • 0 Attachment
      அன்பர்களே,

      தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்கள்/நாட்டுத் தலைவர்களில்
      குறிப்பிடத்தக்கவர் சேதுநாட்டை ஆண்ட கிழவன் சேதுபதி எனப்படும் ரகுநாத
      சேதுபதி.
      பெரும் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவருடைய தலைமை அமைச்சராக இருந்தார்.
      கிழவனின் சிலாரூபப் படம் ஒன்று கிடைத்துள்ளது. அதன் உச்சியும் அடியும் மறைந்துள்ளன.
      இதைக் கணினியின் மூலமாக உருவாக்கி விடலாம். அத்துடன் அவர் உண்மையிலேயே
      எப்படி இருந்திருப்பார் என்பதையும் காணமுடியும்.
      சிலைகளிலிருந்து ஜூலியஸ் ஸீஸரும், நீரோவும், க்லியோப்பாட் ராவும்
      எப்படியிருந்தனர் என்பதை புனருத்தாரணம் செய்திருப்பதைப்
      பார்த்திருக்கிறேன்.
      வெள்ளைக்கார வரலாற்று ஆய்வாளர்கள்/கணினியாளர்கள் பயன்படுத்திய டெக்நிக்
      முதலியவற்றைப் பயன்படுத்தினால் இதே மாதிரி நம்ம ஆட்களுக்கும் செய்து
      பார்க்கலாமே?

      அன்புடன்

      ஜெயபாரதி
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.