Loading ...
Sorry, an error occurred while loading the content.

பன்னிரு திருமுற ை முழுவதும் குரல ிசையில்

Expand Messages
  • subra manian
    ... From: Maravanpulavu K. Sachithananthan Date: 2011/5/31 Subject: [MinTamil] பன்னிரு திருமுறை
    Message 1 of 1 , May 31, 2011
    • 0 Attachment
      ---------- Forwarded message ----------
      From: Maravanpulavu K. Sachithananthan <tamilnool@...>
      Date: 2011/5/31
      Subject: [MinTamil] பன்னிரு திருமுறை முழுவதும் குரலிசையில்

      வணக்கம்
      19. 10. 2038 (31. 10. 2007) புதன்கிழமை காலை 10 மணி. தூத்துக்குடி சைவ சித்தாந்த
      சபை. தேவாரம் மின்னம்பல தளத்தை ஒலி ஒளிக் காட்சியாக விளக்கி உரையாற்றினேன். பணி
      நாள் ஆயினும் அரங்கு நிரம்பியிருந்தது. என் உரை முடிவில் தளம் தொடர்பான வினாக்களைத்
      தொடுத்தனர், தேவார மின்னம்பல தள வளர்ச்சிக்கு நன்கொடைகளை வழங்கினர்.

      அவர்களுள் ஒருவர் பாடல்களுக்குக் குரலிசை இல்லையே என்றார். குரலிசைகளைச் சேர்க்க
      முயல்கிறேன் என்றேன். குரலிசையைத் தளத்தில் சேர்ப்பதாயின் தொடக்க நிதியாக ரூ. 5,000
      தருகிறேன் என்றார்.

      அவர் பெயர் திரு. சி. என். பிரபாகரன். அவரும் அவரது துணைவியாரும் அவரது மகன் திரு.
      பி. சிவப்பிரகாசமும் அன்று மாலை நான் தங்கியிருந்த விடுதிக்கு வந்தனர். ரூ. 5,001
      தந்தனர்.
      சில வாரங்களின் பின்னர் திருமுறைகளின் 24 பண்களுக்கும் ஓதுவார் சி.
      சுந்தரமூர்த்தியின் குரலிசையில் மாதிரிப் பண்கள் அமைந்த ஒலிவட்டையும் எனக்கு
      அனுப்பினர். தேவாரம் மின்னம்பல தளத்தில் சேர்த்தேன். உலகெங்கும் கேட்டுப்
      பயன்பெற்றனர்.
      <http://www.thevaaram.org/thirumurai_1/ani/pannisai.html>

      ஓதுவார் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசைத்த 10,302 திருமுறைப் பாடல்களின் உரிமம்
      பெறத் திருவான்மியூரில் வாணி பதிவகத்தாரிடம் செல்லத் தொடங்கினேன். 2007இல் தொடங்கிய
      இம்முயற்சியில், மருத்துவர் தி. ந. இரா. சுரேஷ் வழிகாட்டப் பொற்றாளம் துரை.
      ஆறுமுகம் அவர்கள் 2008இல் இணைந்து கொண்டார்கள். 11ஆம் திருமுறையின் 392 பாடல்களின்
      பதிவைக் கட்டணமின்றித் தளத்தில் ஏற்ற வாணி பதிவகத்தார் 2009இல் இசைந்தார்கள். 2011
      தை மூன்றாம் நாள், 10,302 பாடல்களையும் தேவாரம் தளத்தில் ஏற்றும் உரிமத்தைப்
      பெற்றோம். சிங்கப்பூர்ச் சைவ அடியவர்கள் இந்த உரிமம் பெற ஆதரித்தனர்.

      திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் குரலிசையில் வெளிவந்த 658 திருவாசகப் பாடல்களைத்
      தேவாரம் மின்னம்பல தளத்தில் ஏற்ற 20.11.2007 நாளிட்ட கடிதத்தில் அருட்செல்வர் நா.
      மகாலிங்கம் அவர்கள் உரிமம் வழங்க, தளத்தில் ஏற்றினோம்.

      சிங்கப்பூர் அருள்மிகு உருத்திரகாளி அம்மன் கோயிலார் மற்றும் சிங்கப்பூர்த்
      திருமுறை மாநாட்டுக் குழுவினர் 2009 தையில் பெரிய புராணம் 4,274 பாடல்கள்
      முழுவதையும் குரலிசைப் பதிவாக்கித் தேவாரம் மின்னம்பல தளத்தில் ஏற்றுமாறு
      ஆதரவளித்தனர். இரண்டு ஆண்டுகளில் அப்பதிவுப் பணி முடிவடைந்தது. தளத்தில் பெரிய
      புராணப் பாடல்களைக் கேட்கலாம்.

      சென்னை, கோயம்பேடு, திரு. அழகியசுந்தரம் அவர்களும் பெரிய புராணக் குரலிசைப்பதிவு
      முயற்சிக்கு ஆதரவு தந்தார்.

      திருக்கோவையார், திருமந்திரம் (497 பாடல்கள் பதிவானவை தவிர), 11ஆம் திருமுறை (392
      பாடல்கள் பதிவானவை தவிர) என்பன குரலிசைக்குள் வராத பகுதிகள். இவற்றைக் குரலிசையில்
      பதிவுசெய்வதற்குச் சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டுக் குழுவினர் ஆதரவு தருவதால்
      பதிவுப் பணிகள் தொடங்கியுள்ளோம்.



      திருமுறை மொத்த தளத்தில் தளத்தில்(தயாராகஉள்ள) பதிவு
      எண் பாடல்கள் ஏற்றப்பட்டவை ஏற்றப்படவேண்டியவை செய்யப்படவேண்டியவை
      1 1469 1463 6 0
      2 1331 1320 11 0
      3 1358 1357 1 0
      4 1070 999 71 0
      5 1015 953 62 0
      6 981 935 46 0
      7 1026 1026 0 0
      8 1058 658 135 265
      9 301 0 301 0
      10 3000 197 300 2503
      11 1385 392 0 993
      12 4274 3683 591 0
      மொத்தம் 18268 12985 1524 3761







      மேன்மைகொள் திருமுறைப் பண்ணிசையை மின்னம்பலத்தில் உலகெலாம் கேட்கலாம்.
      --
      மறவன்புலவு க. சச்சிதானந்தன்
      Maravanpulavu K. Sachithananthan

      --

      [Non-text portions of this message have been removed]
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.