Loading ...
Sorry, an error occurred while loading the content.

Power of MaNi Stones (Tamil unicode)

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, மணிக்கற்களுக்கெல்லாம் ஆற்றல், சக்தி முதலியவை
    Message 1 of 2 , Nov 1, 2010
    • 0 Attachment
      அன்பர்களே,

      மணிக்கற்களுக்கெல்லாம் ஆற்றல், சக்தி முதலியவை எப்படி ஏற்படுகின்றன, எப்படி
      செயல்படுகின்றன என்றெல்லாம் மூன்று பேர் கேட்டார்கள்.
      உடல் பிணிகளைப் போக்குவதற்கும் துன்பங்களை நீக்குவதற்கும் மணி, மந்திரம்,
      ஔஷதம் என்ற மூன்றைப் பயன்படுத்த சாஸ்திரங்கள் கூறியிருக்கின்றன.
      ஔஷதம் என்பது மருந்து, மூலிகை போன்றவை அடங்கியது. மந்திரங்களைப் பற்றி
      விளக்கம் வேண்டியதில்லை. மணி என்பது ஜோதிடம், மணிக்கற்கள் போன்றவற்றைக்
      குறிக்கும்.
      சில மணிக்கற்களுக்கு விதியை ஓரளவுக்கு மாற்றியமைக்கும் ஆற்றல் உண்டு என்று
      சாஸ்திரங்கள் கூறுகின்றன.
      விஷயம் தெரிந்த இந்துக்கள் மிகவும் பயப்படுவது ப்லூ ஸ·பையர் என்னும்
      நீலத்துக்கும்
      வைரத்துக்கும்தான்.
      ஹோப் என்னும் வைரமும் ஆர்லா·ப் என்னும் வைரமும் வரலாறு படைத்தவை.
      அவற்றைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் எழுதியுள்ளேன்.
      தற்காலத்தில் நம்மிடையே வழங்கும் மணி நூலில் மாணிக்கம், முத்து, பவளம், மரகதம்,
      புஷ்பராகம், வைரம், நீலம், வைடூர்யம், கோமேதகம் ஆகியவற்றைப் பற்றி காணலாம்.
      ஆனால் வேறு சில இனத்தவர் வேறு பல மாதிரியான மணிக்கற்களை மிகுதியாகப்
      பயன்படுத்துகிறார்கள்.
      சீனர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் ஜேட் என்னும் பச்சைக்கல்லை
      மிகவும் உயர்வாகக் கருதுவார்கள்.
      மலாய்க்காரர்கள் டைகர்ஸ் ஐ, அகேட், டர்க்வாய்ஸ் போன்றவற்றை
      முக்கியமானவையாகக் கருதுவார்கள்.
      அகேட் என்னும் மணிக்கல் மாந்திரீகம், பில்லி, சூனியம், காற்று கறுப்பு
      போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல்படைத்தது என்று நம்புவார்கள்.
      ஆண்கள் தங்கத்தை அணிய மாட்டார்கள். வெள்ளியும் வெள்ளீயமும், செம்பும்
      கலந்த கலவையைத்தான் அணிவார்கள்,. பெண்கள் பொன்னை விரும்புவார்கள்.
      ஆப்ஸிடியன் என்னும் கல்லும் விசேஷமானதுதான். விண்ணிலிருந்து விழும் விண்
      கற்களில் சில கற்கள் மேக்னட்டைட் என்னும் இரும்பால் ஆனவை. அவற்றிற்கெல்லாம்
      அதிக மதிப்புண்டு.
      இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.

      அன்புடன்

      ஜெயபாரதி
    • Rathakrishnan Arumugam
      எழுதுங்கள் டாக்டர் ஐயா அவர்களே,
      Message 2 of 2 , Nov 1, 2010
      • 0 Attachment
        எழுதுங்கள் டாக்டர் ஐயா அவர்களே,
        படிப்பதற்கு ஆவலாக உள்ளோம். உங்கள் தகவல் கல் வாங்க எண்ணுபவர்க்கு
        ஒரு வழிகாட்டியாக இருக்குமே.  ( அவர்கள் ஏமாறாம இருக்க உதவும் என்று நம்புகிறேன்) .
        அன்புடன்
        ராதாகிருஷ்ணன் ஆறுமுகம்




        ________________________________
        From: jay bee <jaybee011008@...>
        To: agathiyar@yahoogroups.com
        Sent: Mon, November 1, 2010 8:28:26 PM
        Subject: [agathiyar] Power of MaNi Stones (Tamil unicode)

         
        அன்பர்களே,

        மணிக்கற்களுக்கெல்லாம் ஆற்றல், சக்தி முதலியவை எப்படி ஏற்படுகின்றன, எப்படி
        செயல்படுகின்றன என்றெல்லாம் மூன்று பேர் கேட்டார்கள்.
        உடல் பிணிகளைப் போக்குவதற்கும் துன்பங்களை நீக்குவதற்கும் மணி, மந்திரம்,
        ஔஷதம் என்ற மூன்றைப் பயன்படுத்த சாஸ்திரங்கள் கூறியிருக்கின்றன.
        ஔஷதம் என்பது மருந்து, மூலிகை போன்றவை அடங்கியது. மந்திரங்களைப் பற்றி
        விளக்கம் வேண்டியதில்லை. மணி என்பது ஜோதிடம், மணிக்கற்கள் போன்றவற்றைக்
        குறிக்கும்.
        சில மணிக்கற்களுக்கு விதியை ஓரளவுக்கு மாற்றியமைக்கும் ஆற்றல் உண்டு என்று
        சாஸ்திரங்கள் கூறுகின்றன.
        விஷயம் தெரிந்த இந்துக்கள் மிகவும் பயப்படுவது ப்லூ ஸ·பையர் என்னும்
        நீலத்துக்கும்
        வைரத்துக்கும்தான்.
        ஹோப் என்னும் வைரமும் ஆர்லா·ப் என்னும் வைரமும் வரலாறு படைத்தவை.
        அவற்றைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் எழுதியுள்ளேன்.
        தற்காலத்தில் நம்மிடையே வழங்கும் மணி நூலில் மாணிக்கம், முத்து, பவளம், மரகதம்,
        புஷ்பராகம், வைரம், நீலம், வைடூர்யம், கோமேதகம் ஆகியவற்றைப் பற்றி காணலாம்.
        ஆனால் வேறு சில இனத்தவர் வேறு பல மாதிரியான மணிக்கற்களை மிகுதியாகப்
        பயன்படுத்துகிறார்கள்.
        சீனர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் ஜேட் என்னும் பச்சைக்கல்லை
        மிகவும் உயர்வாகக் கருதுவார்கள்.
        மலாய்க்காரர்கள் டைகர்ஸ் ஐ, அகேட், டர்க்வாய்ஸ் போன்றவற்றை
        முக்கியமானவையாகக் கருதுவார்கள்.
        அகேட் என்னும் மணிக்கல் மாந்திரீகம், பில்லி, சூனியம், காற்று கறுப்பு
        போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல்படைத்தது என்று நம்புவார்கள்.
        ஆண்கள் தங்கத்தை அணிய மாட்டார்கள். வெள்ளியும் வெள்ளீயமும், செம்பும்
        கலந்த கலவையைத்தான் அணிவார்கள்,. பெண்கள் பொன்னை விரும்புவார்கள்.
        ஆப்ஸிடியன் என்னும் கல்லும் விசேஷமானதுதான். விண்ணிலிருந்து விழும் விண்
        கற்களில் சில கற்கள் மேக்னட்டைட் என்னும் இரும்பால் ஆனவை. அவற்றிற்கெல்லாம்
        அதிக மதிப்புண்டு.
        இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதலாம்.

        அன்புடன்

        ஜெயபாரதி






        [Non-text portions of this message have been removed]
      Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.