Loading ...
Sorry, an error occurred while loading the content.
 

An Untold Story -#11 (Tamil unicode)

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, இந்திரபுரத்திலிருந்து புதுப் புது நகரங்களாகிய
    Message 1 of 2 , Jun 1, 2010
      அன்பர்களே,

      இந்திரபுரத்திலிருந்து புதுப் புது நகரங்களாகிய
      அமரேந்திரபுரத்துக்கும் அங்கிருந்து ஹரிஹராலயாவுக்கும்
      அங்கிருந்து மஹேந்திரபர்வதத்துக்குமாக மாறி மாறி சென்று
      கொண்டிருந்த ஜயவர்மர் தம்முடைய வாழ்வின் இறுதி
      ஆண்டுகளின்போது ஹரிஹராலயாவுக்குத் திரும்பிவந்து
      அங்கேயே இருந்தார்.
      தேவராஜ மரபு ஒன்றை ஏற்படுத்திக்கொண்ட ஜயவர்மர்
      கடவுளுக்குச் சமமாக வணங்கப்பட்டார். அவருடைய வழியில்
      வந்தவர்களும் தேவராஜ வழிபாட்டிற்கு தகுதிபெற்றவர்களாக
      ஆனார்கள்.
      அவர் உயிருடன் இருந்தவரைக்கும் ஜாவா/ஸ்ரீவிஜய சைலேந்திரர்களிடம் ஏதும்
      அபாயம் ஏற்பட்டதாகத் தெரிய
      வில்லை.
      அங்கு அவர் மறைந்தபின்னர் அவருக்குப் 'பரமேஸ்வரா'
      என்னும் பட்டப் பெயரைக் கொடுத்துச் சிறப்பித்தார்கள்.
      அவருக்குப் பின்னர் மூன்றாம் ஜயவர்மரும் அடுத்து
      யசோவர்மனும் ஆண்டனர்.
      யசோவர்மன் யசோதரபுரம் என்ற பெயரில் ஒரு புதிய
      பெரிய நகரத்தை நிர்மாணித்தார். தோன்லே ஸாப் ஏரிக்கு
      அருகில் அது நிறுவப்பட்டது.
      யசோதரபுரம்தான் அங்க்கோர் என்ற பெயரில்
      உலகப்புகழ் பெற்ற மறைந்த மாநகரம்.
      இந்த இடத்தில் தோன்லே ஸாப் ஏரியைப் பற்றியும்
      இந்தோச்சீனாவின் பல புராதன நாகரிகங்களுக்கு உயிரூட்டிய
      மகாநதி ஒன்றைப் பற்றியும் சொல்லவேண்டும்......

      அன்புடன்

      ஜெயபாரதி

      =====================
    • Aru
      ஐயா, *அங்கு அவர் மறைந்தபின்னர் அவருக்குப் பரமேஸ்வரா * இங்கு
      Message 2 of 2 , Jun 1, 2010
        ஐயா,

        *அங்கு அவர் மறைந்தபின்னர் அவருக்குப் 'பரமேஸ்வரா'* இங்கு நீங்கள்
        குறிப்பிடும் பரமேஸ்வராவும் மலாக்கா மாநிலத்தை ஆண்ட பரமேஸ்வராவும் ஒரே நபரா?

        2010/6/1 jay bee <jaybee011008@...>

        >
        >
        > அன்பர்களே,
        >
        > இந்திரபுரத்திலிருந்து புதுப் புது நகரங்களாகிய
        > அமரேந்திரபுரத்துக்கும் அங்கிருந்து ஹரிஹராலயாவுக்கும்
        > அங்கிருந்து மஹேந்திரபர்வதத்துக்குமாக மாறி மாறி சென்று
        > கொண்டிருந்த ஜயவர்மர் தம்முடைய வாழ்வின் இறுதி
        > ஆண்டுகளின்போது ஹரிஹராலயாவுக்குத் திரும்பிவந்து
        > அங்கேயே இருந்தார்.
        > தேவராஜ மரபு ஒன்றை ஏற்படுத்திக்கொண்ட ஜயவர்மர்
        > கடவுளுக்குச் சமமாக வணங்கப்பட்டார். அவருடைய வழியில்
        > வந்தவர்களும் தேவராஜ வழிபாட்டிற்கு தகுதிபெற்றவர்களாக
        > ஆனார்கள்.
        > அவர் உயிருடன் இருந்தவரைக்கும் ஜாவா/ஸ்ரீவிஜய சைலேந்திரர்களிடம் ஏதும்
        > அபாயம் ஏற்பட்டதாகத் தெரிய
        > வில்லை.
        > அங்கு அவர் மறைந்தபின்னர் அவருக்குப் 'பரமேஸ்வரா'
        > என்னும் பட்டப் பெயரைக் கொடுத்துச் சிறப்பித்தார்கள்.
        > அவருக்குப் பின்னர் மூன்றாம் ஜயவர்மரும் அடுத்து
        > யசோவர்மனும் ஆண்டனர்.
        > யசோவர்மன் யசோதரபுரம் என்ற பெயரில் ஒரு புதிய
        > பெரிய நகரத்தை நிர்மாணித்தார். தோன்லே ஸாப் ஏரிக்கு
        > அருகில் அது நிறுவப்பட்டது.
        > யசோதரபுரம்தான் அங்க்கோர் என்ற பெயரில்
        > உலகப்புகழ் பெற்ற மறைந்த மாநகரம்.
        > இந்த இடத்தில் தோன்லே ஸாப் ஏரியைப் பற்றியும்
        > இந்தோச்சீனாவின் பல புராதன நாகரிகங்களுக்கு உயிரூட்டிய
        > மகாநதி ஒன்றைப் பற்றியும் சொல்லவேண்டும்......
        >
        > அன்புடன்
        >
        > ஜெயபாரதி
        >
        > =====================
        >
        >


        [Non-text portions of this message have been removed]
      Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.