Loading ...
Sorry, an error occurred while loading the content.

Re: [agathiyar] சரித்திரம ும், இனவாத கட்டுக ் கதைகளும்

Expand Messages
 • Ummadevi Suppiah
  வணக்கம்.   வரலாற்றை பதிவு செய்பவர்கள் சமுதாய கடப்பாடுடனும்
  Message 1 of 16 , Oct 31, 2009
  • 0 Attachment
   வணக்கம்.
    
   வரலாற்றை பதிவு செய்பவர்கள் சமுதாய கடப்பாடுடனும் பொறுப்புணர்சியுடனும் எழுத வேண்டும். எழுத்து சக்தி வாய்ந்தது. பல புரட்சிகளை / மாற்றங்களை செய்ய வல்லது. அதனால் யாரும் எதையும் எழுதி விடலாம் என்று நினைத்திட கூடாது.   சமுக  மேம்பாட்டிற்கு  வித்திடும் ஆக்கபூர்வமான  எழுத்துக்களை  படைக்க  விரும்புவோர்  இன்றே  எழுதுகோலை  எடுக்கலாம்.
   ஆனால் என் அனுபவத்தில் கண்டது. எவ்வளுதான் ஆபத்தான வரலாற்று மூலத்தை கண்டாலும், அதை பொறுப்போடு எழுதும் பக்குவம் வேண்டும். சில வேளைகளில் நாம்   critical ஆக  எழுதவில்லை / ஆராயவில்லை என பலர் கூருவர்.  அதில் எனக்கு உடன்பாடில்லை. சமுதாய பொறுப்புடன் எழுதுவதும் ஒருவகையில்  creative and critical  எழுத்து  தான். That makes a person / researcher/ historian more authentic. Validity and reliability should be under researchers' full control.
    
   நன்றி.
   சு. உமா  
    


    


   New Email addresses available on Yahoo!
   Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
   Hurry before someone else does!
   http://mail.promotions.yahoo.com/newdomains/aa/

   [Non-text portions of this message have been removed]
  • Rathakrishnan Arumugam
   அன்புள்ள ஐயா, இந்த மடல் ஞாபகம் உள்ளதா?
   Message 2 of 16 , Aug 16, 2010
   • 0 Attachment
    அன்புள்ள ஐயா,
    இந்த மடல் ஞாபகம் உள்ளதா? இந்த தீபாவளியும் நெருங்கி வருகிறது. பதில் வருமா ..
    வராதா? (வரும் ஆனா வராதுன்னு நம்ப வடிவேல் அண்ணன் மாதிரி சொல்ல கூடாது!)

    அன்புடன் 
    ராதாகிருஷ்ணன் ஆறுமுகம்
    ________________________________
    From: Rathakrishnan Arumugam <ratha_expg@...>
    To: agathiyar@yahoogroups.com
    Sent: Wed, October 21, 2009 10:39:59 PM
    Subject: Re: [agathiyar] Fw: தீபா”வலி”யும் வெட்கம் கெட்ட தமிழரும்!

     
    Dear Aiya,
    Eagerly waiting for your reply on this topic.
    rgds

    ____________ _________ _________ __
    From: jay bee <jaybee011008@ gmail.com>
    To: agathiyar@yahoogrou ps.com
    Sent: Wed, October 21, 2009 5:09:03 PM
    Subject: Re: [agathiyar] Fw: தீபா”வலி”யும் வெட்கம் கெட்ட தமிழரும்!

     
    அன்பர்களே,

    இந்த மடலுக்குப் பெரியாரின் பழம்பெரும் சீடர் ஒருவரின் மகனும் பெரியாரியத்தின்
    பல கோட்பாடுகளைக் கடைபிடித்து வருபவனும் ஆரிய பார்ப்பானாக
    அல்லாதவனுமாகிய நான் பதில் அளிக்க நினைக்கிறேன்.

    அன்புடன்

    ஜெயபாரதி

    2009/10/21 <ktprashanthan@ yahoo.com>

    >
    >
    >
    >
    > --- On Mon, 19/10/09,
    > Subject: Fw: தீபா”வலி”யும் வெட்கம் கெட்ட தமிழரும்!
    > To:
    > Date: Monday, 19 October, 2009, 5:09 PM
    >
    > --- On Mon, 19/10/09,
    > Date: Monday, 19 October, 2009, 3:05 PM
    >
    > --- On Mon, 19/10/09,
    > >
    > Date: Monday, 19 October, 2009, 3:53
    >
    > உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும்
    > கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள்,
    > வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக
    > நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும்
    > குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது. ஆனால்
    > தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை
    > மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில்
    > உண்டு.
    >
    > அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து
    > முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற
    > தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத
    > முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும்
    > புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த
    > பெருமைக்குரியவர்கள். இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது.
    > தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும்,
    > தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர்
    > கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி
    > திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள்
    > தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி
    > சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.
    > ஆனால்
    > இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின்
    > மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம்
    > கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
    > அதைப்
    > பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப்
    > பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப்
    > பார்ப்போம்.
    > முன்பொரு காலத்தில் ஒரு
    > அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து
    > வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று
    > கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி
    > அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை
    > மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல
    > இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான்
    > நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு
    > யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன்
    > எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும்
    > பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம்.
    > கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால்
    > கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம். இப்படி
    > ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப்
    > பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை
    > எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி
    > பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள
    > முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள்
    > தள்ளியது
    > ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே
    > நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள்
    > என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை
    > கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை
    > உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.
    > பாரத கண்டத்தின் வரலாறு என்பது
    > ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற
    > தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான
    > ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில
    > ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும்
    > நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட
    > காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில்
    > தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.
    > சுர
    > பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர
    > பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள்.
    > அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில்
    > குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக
    > சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை
    > எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள்
    > கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக்
    > கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல்
    > நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே
    > குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.
    > ஆரியர்களுக்கும்
    > திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ்
    > மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர்
    > நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல
    > பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில்
    > தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து
    > இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே
    > அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை
    > ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.
    > இராவணனின் வீழ்ச்சிக்கு
    > பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ்
    > மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய
    > ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.
    > கடைசியில்
    > தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை
    > திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள்
    > பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக
    > போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக
    > நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு
    > கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.
    > ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்!
    >
    > சிங்களப்
    > படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக்
    > கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது
    > எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும்
    > முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று
    > போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ்
    > மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.
    > இப்படி
    > அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம்
    > மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை
    > வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து
    > விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த
    > வேண்டும்.
    >
    > இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக
    > இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை.
    > எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள்
    > யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின்
    > இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு
    > கொண்டாடப்படுவதில்லை.
    >
    > ஆனால் நாம்
    > எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக
    > கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த
    > நாளாக இருக்கும். கு.கண்ணன்
    > பெரியார் திராவிடர்கழகம்
    > “தமிழ்க் குடில்”
    > 6/28, புதுத்தெரு
    > கண்ணம்மாப்பேட்டை
    > தியாகராயர் நகர்
    > சென்னை – 6000 017
    >
    > Keep your friends updated— even when you’re not signed in.
    >
    > Search. browse and book your hotels and flights through Yahoo! Travel
    >
    > New Email names for you!
    > Get the Email name you've always wanted on the new @ymail and
    > @rocketmail.
    > Hurry before someone else does!
    > http://mail. promotions. yahoo.com/ newdomains/ sg/
    >
    > [Non-text portions of this message have been removed]
    >
    >
    >

    [Non-text portions of this message have been removed]

    [Non-text portions of this message have been removed]    [Non-text portions of this message have been removed]
   Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.