Loading ...
Sorry, an error occurred while loading the content.

My Discovery Series -#2(Tamil unicode)

Expand Messages
  • jay bee
    அன்பர்களே, சென்ற மடலில் சூரைக்குடியில் பார்த்த இரண்டு
    Message 1 of 3 , Feb 1, 2009
    • 0 Attachment
      அன்பர்களே,

      சென்ற மடலில் சூரைக்குடியில் பார்த்த இரண்டு
      பொட்டல்களில் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன்.
      இன்னொன்றின் பெயர் 'சோலந்திக் கோட்டை'
      அல்லது 'சோலவந்திக் கோட்டை' என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

      இதற்குக் கொஞ்சம் பின்னணியைச் சொல்லவேண்டும்.

      சூரைக்குடி இருக்கும் பிரதேசம் வடபாண்டி
      மண்டலத்தில் இருக்கிறது.
      இந்தப் பிரதேசத்திற்குப் பெயர் ஐந்து நிலை நாடு.
      வழக்குத் தமிழில் அஞ்சல்நாடு அல்லது அஞ்சலநாடு
      என்பார்கள். ஐந்து மங்கலம் என்றும் பெயருண்டு.

      பழங்காலத்தில் ஒரு தேசத்தை மண்டலங்களாகப்
      பிரித்திருப்பார்கள். மண்டலங்களை வளநாடுகளாகப்
      பிரித்தார்கள். வளநாடு என்பது ஒரு மாகாணம் போன்றது.
      ஒரு வளநாட்டில் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை
      'நாடு' என்பார்கள். நாட்டின் உட்பிரிவுகள் ஊர், கிராமம்,
      புரம் போன்றவை.
      பிராம்மணர்கள் இருக்கும் ஊர்களைச் சதுர்வேத
      மங்கலம் என்றோ அகரம் என்றோ குறிப்பிட்டார்கள்.
      சில ஊர்கள் அடங்கிய சற்றுப் பெரிய பிரதேசத்தை
      'பிரம்ம தேசம்' என்றார்கள். இவையெல்லாம் பிராம்மணர்களுக்குத்
      தானமாகக் கொடுக்கப்பட்டவை. வரியில்லாதவை.
      வைசியர்கள் வசித்த ஊர்களை 'நகரம்' என்பார்கள்.
      'பட்டினம்' என்பது கடற்கரையில் இருக்கும். வைசியர்களின்
      ஊர்களில் சிலவற்றைப் பட்டினம் என்றார்கள்.
      ஒவ்வொன்றுக்கும் நிர்வாகக் குழு, நாட்டாண்மைக் குழு
      இருந்தது. நிர்வாகத்தைச் செய்வதற்கென்று வாரியங்கள்
      இருந்தன.
      இவை தவிர 'நிலைப்புறம்' என்ற பிரதேசங்களும்
      இருந்தன.
      இவற்றில் போர் புரியும் குடியினர் வாழ்ந்தனர்.
      நிலைப்புறத்தில் உள்ள முக்கியமான பெரிய ஊர்
      'நிலை' எனப்பட்டது.
      இவையெல்லாம் பழங்காலத்துப் பாண்டியர்கள்
      ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை.
      நிலைப்புறத்தில் பல கோட்டைகள் இருந்தன.
      இன்று சிங்கம்புணரி என்ற பெயரைக் கொண்டுள்ள
      ஊர் இந்த ஐந்துநிலை நாட்டின் முக்கிய ஊர். தலைமையகம்.
      பழங்காலத்தில் அதன் பெயர் 'வேள்குலராம நிலையான
      வீரபாண்டிய நல்லூர்'.
      பாண்டியர்கள் ஐந்து கிளைகளாக இருந்து பாண்டிய
      நாட்டை ஆங்காங்கு இருந்து ஆண்டுவந்தார்கள் என்று
      அடிக்கடி அகத்தியத்தில் எழுதியிருக்கிறேன்.
      சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பராக்கிரம
      பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன்
      என்ற ஐந்து பெயர்களில் அவர்கள் ஆண்டார்கள்.
      இவை அவர்களுக்குரிய அபிஷேகநாமங்கள். ஜடாவர்மன்,
      மாறவர்மன் என்ற பட்டப்பெயர்களை இந்த பெயர்களின்
      முன் சூட்டிக்கொள்வார்கள்.
      இந்த ஐந்து பாண்டியர்களின் பெயரால் ஐந்து
      நிலைகள் இருந்தன.
      என்னால் இரண்டு நிலைகளை அடையாளம்
      காணமுடிந்தது.
      ராஜராஜ சோழர் பாண்டியநாட்டைப் பிடித்துக்
      கொண்ட பின்னரும் பாண்டியர்கள் ஆங்காங்கு இருந்து
      போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.
      ராஜேந்திர சோழர் காலத்தில் அசல் பாண்டியர்களை
      அடக்கி ஒடுக்கிவிட்டார்.
      அவர்களின் குலத்தையும் பாண்டியநாட்டு அரச
      பீடத்திலிருந்து அகற்றிவிட்டார். சிற்றரசராக இருக்கக்கூட
      அருகதை இல்லாமற் போய்விட்டது.
      புதியதொரு பாண்டிய பரம்பரையை அவர்
      தோற்றுவித்தார்.
      'சோழபாண்டியர்' என்ற பெயரில் அவர்கள் மதுரையை ஆண்டனர்.
      அவர்கள் எல்லாம் ராஜேந்திர சோழரின் வாரிசுகள்தாம்.
      பாண்டியநாட்டிலுள்ள பெயர்களையும் மாற்றினார்.
      பாண்டியநாடு 'ராஜராஜ பாண்டிய நாடு' ஆகியது.
      ஐந்து நிலை நாடு இருந்த மாகாணத்தின் பெயர்
      கேரளசிங்க வளநாடு. அதை 'ராஜேந்திர சோழ வள நாடு'
      என்று பெயர் மாற்றம் செய்தனர்.
      குந்தவைப் பேரேரி, கரிகால் சோழன் வாய்க்கால் என்று
      அனைத்துமே பெயர் மாற்றம் பெற்றன.
      'Choliyanisation'.
      ஐந்துநிலை நாட்டின் நிலைப்புறங்களில் முக்கியமானதை
      'சோழபாண்டிய நிலைப்புறம்' என்று அழைத்தார்கள்.
      கோட்டைகளில் முக்கியமானதாக இருந்த ஒன்று
      'சோழபாண்டிய நிலை' ஆகியது.
      ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'சோழபாண்டியக்
      கோட்டை' இருந்த இடம்தான் நாற்பது ஆண்டுகளுக்கு
      முன்னர் சோலவந்திக் கோட்டைப் பொட்டலாக விளங்கியது.

      அன்புடன்

      ஜெயபாரதி

      ===================================


      [Non-text portions of this message have been removed]
    • Amala Singh
      இராசராச சோழரும், இராசேந்திர சோழரும் பாண்டிய நாட்டை
      Message 2 of 3 , Feb 1, 2009
      • 0 Attachment
        இராசராச சோழரும், இராசேந்திர சோழரும் பாண்டிய நாட்டை இல்லாமல் செய்தது
        வரலாற்றுத்தவறா? தமிழகம் அந்நியருக்கு அடிமையானது இங்கிருந்துதான்
        ஆரம்பித்தது என்று சொன்னால் அது மிகையாகுமா?

        2009/2/1 jay bee <jaybee011008@...>:
        > அன்பர்களே,
        >
        > சென்ற மடலில் சூரைக்குடியில் பார்த்த இரண்டு
        > பொட்டல்களில் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன்.
        > இன்னொன்றின் பெயர் 'சோலந்திக் கோட்டை'
        > அல்லது 'சோலவந்திக் கோட்டை' என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
        >
        > இதற்குக் கொஞ்சம் பின்னணியைச் சொல்லவேண்டும்.
        >
        > சூரைக்குடி இருக்கும் பிரதேசம் வடபாண்டி
        > மண்டலத்தில் இருக்கிறது.
        > இந்தப் பிரதேசத்திற்குப் பெயர் ஐந்து நிலை நாடு.
        > வழக்குத் தமிழில் அஞ்சல்நாடு அல்லது அஞ்சலநாடு
        > என்பார்கள். ஐந்து மங்கலம் என்றும் பெயருண்டு.
        >
        > பழங்காலத்தில் ஒரு தேசத்தை மண்டலங்களாகப்
        > பிரித்திருப்பார்கள். மண்டலங்களை வளநாடுகளாகப்
        > பிரித்தார்கள். வளநாடு என்பது ஒரு மாகாணம் போன்றது.
        > ஒரு வளநாட்டில் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை
        > 'நாடு' என்பார்கள். நாட்டின் உட்பிரிவுகள் ஊர், கிராமம்,
        > புரம் போன்றவை.
        > பிராம்மணர்கள் இருக்கும் ஊர்களைச் சதுர்வேத
        > மங்கலம் என்றோ அகரம் என்றோ குறிப்பிட்டார்கள்.
        > சில ஊர்கள் அடங்கிய சற்றுப் பெரிய பிரதேசத்தை
        > 'பிரம்ம தேசம்' என்றார்கள். இவையெல்லாம் பிராம்மணர்களுக்குத்
        > தானமாகக் கொடுக்கப்பட்டவை. வரியில்லாதவை.
        > வைசியர்கள் வசித்த ஊர்களை 'நகரம்' என்பார்கள்.
        > 'பட்டினம்' என்பது கடற்கரையில் இருக்கும். வைசியர்களின்
        > ஊர்களில் சிலவற்றைப் பட்டினம் என்றார்கள்.
        > ஒவ்வொன்றுக்கும் நிர்வாகக் குழு, நாட்டாண்மைக் குழு
        > இருந்தது. நிர்வாகத்தைச் செய்வதற்கென்று வாரியங்கள்
        > இருந்தன.
        > இவை தவிர 'நிலைப்புறம்' என்ற பிரதேசங்களும்
        > இருந்தன.
        > இவற்றில் போர் புரியும் குடியினர் வாழ்ந்தனர்.
        > நிலைப்புறத்தில் உள்ள முக்கியமான பெரிய ஊர்
        > 'நிலை' எனப்பட்டது.
        > இவையெல்லாம் பழங்காலத்துப் பாண்டியர்கள்
        > ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை.
        > நிலைப்புறத்தில் பல கோட்டைகள் இருந்தன.
        > இன்று சிங்கம்புணரி என்ற பெயரைக் கொண்டுள்ள
        > ஊர் இந்த ஐந்துநிலை நாட்டின் முக்கிய ஊர். தலைமையகம்.
        > பழங்காலத்தில் அதன் பெயர் 'வேள்குலராம நிலையான
        > வீரபாண்டிய நல்லூர்'.
        > பாண்டியர்கள் ஐந்து கிளைகளாக இருந்து பாண்டிய
        > நாட்டை ஆங்காங்கு இருந்து ஆண்டுவந்தார்கள் என்று
        > அடிக்கடி அகத்தியத்தில் எழுதியிருக்கிறேன்.
        > சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பராக்கிரம
        > பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன்
        > என்ற ஐந்து பெயர்களில் அவர்கள் ஆண்டார்கள்.
        > இவை அவர்களுக்குரிய அபிஷேகநாமங்கள். ஜடாவர்மன்,
        > மாறவர்மன் என்ற பட்டப்பெயர்களை இந்த பெயர்களின்
        > முன் சூட்டிக்கொள்வார்கள்.
        > இந்த ஐந்து பாண்டியர்களின் பெயரால் ஐந்து
        > நிலைகள் இருந்தன.
        > என்னால் இரண்டு நிலைகளை அடையாளம்
        > காணமுடிந்தது.
        > ராஜராஜ சோழர் பாண்டியநாட்டைப் பிடித்துக்
        > கொண்ட பின்னரும் பாண்டியர்கள் ஆங்காங்கு இருந்து
        > போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.
        > ராஜேந்திர சோழர் காலத்தில் அசல் பாண்டியர்களை
        > அடக்கி ஒடுக்கிவிட்டார்.
        > அவர்களின் குலத்தையும் பாண்டியநாட்டு அரச
        > பீடத்திலிருந்து அகற்றிவிட்டார். சிற்றரசராக இருக்கக்கூட
        > அருகதை இல்லாமற் போய்விட்டது.
        > புதியதொரு பாண்டிய பரம்பரையை அவர்
        > தோற்றுவித்தார்.
        > 'சோழபாண்டியர்' என்ற பெயரில் அவர்கள் மதுரையை ஆண்டனர்.
        > அவர்கள் எல்லாம் ராஜேந்திர சோழரின் வாரிசுகள்தாம்.
        > பாண்டியநாட்டிலுள்ள பெயர்களையும் மாற்றினார்.
        > பாண்டியநாடு 'ராஜராஜ பாண்டிய நாடு' ஆகியது.
        > ஐந்து நிலை நாடு இருந்த மாகாணத்தின் பெயர்
        > கேரளசிங்க வளநாடு. அதை 'ராஜேந்திர சோழ வள நாடு'
        > என்று பெயர் மாற்றம் செய்தனர்.
        > குந்தவைப் பேரேரி, கரிகால் சோழன் வாய்க்கால் என்று
        > அனைத்துமே பெயர் மாற்றம் பெற்றன.
        > 'Choliyanisation'.
        > ஐந்துநிலை நாட்டின் நிலைப்புறங்களில் முக்கியமானதை
        > 'சோழபாண்டிய நிலைப்புறம்' என்று அழைத்தார்கள்.
        > கோட்டைகளில் முக்கியமானதாக இருந்த ஒன்று
        > 'சோழபாண்டிய நிலை' ஆகியது.
        > ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'சோழபாண்டியக்
        > கோட்டை' இருந்த இடம்தான் நாற்பது ஆண்டுகளுக்கு
        > முன்னர் சோலவந்திக் கோட்டைப் பொட்டலாக விளங்கியது.
        >
        > அன்புடன்
        >
        > ஜெயபாரதி
        >
        > ===================================
        >
        > [Non-text portions of this message have been removed]
        >
        >



        --
        --
        Nandri,
        Amala Singh
      • vj kumar
        Hi, The Pandya clan made a dramatic come back -after a humbling defeat by Kulottunga kulotthuga III. from K !!! meeikeerti we learn below: puyal vaithu man
        Message 3 of 3 , Feb 3, 2009
        • 0 Attachment
          Hi,

          The Pandya clan made a dramatic come back -after a humbling defeat by
          Kulottunga kulotthuga III. from K !!! meeikeerti we learn below:

          puyal vaithu man valara...
          ....
          then madurai pura mathilai than nedum padai kadal valaiyap
          peru vazhuthiyarum thambiyarum petra thaiyum peerrurimaiyum
          poru varuthuyar thunaiyaaga veeru veeru karambadath
          then maduraip pathipukku vanthathaiyellam keduttup
          podi paduthi vazhuthiyar tham kooda madabam
          kazhuthai yeerida uzhuthu pugaz kadir vilayak kavadivitthi


          But this was immediately paid back in similar terms by Maaravan Sundara
          Pandian

          maaravan sundara pandian ( ad 1219) meeikerthi

          ponniguz nattir puliyaanai pooyakalak
          kannikuz nattir kayalaanai kai valara
          venchina vivuniyum vezhamum parapit
          thanjai sayu murunthaizunch sehtanzhal koluttik
          kaliyu maaru mani neer nalanizhittuk
          koodamu mamathilung kopuramu madarangum
          madamu maligaiyu mandapamum palavidithut
          thozhuthu vanthadaiya nirubar thanthokaiyaar
          azhutha kannerraru parappith
          kazhuthai kondu muthu kavadi vithich
          sembiyanai cinmiriyaip poruthu karam pugavooti
          paim pon mudiparithu


          The death knell for cholas was surprisingly rung in by a small chieftain
          claiming lineage from the pallava - the khadava king Kopperunchingan.
          Whereas the pandyas were outdone by their own infighting.

          rgds
          vj

          2009/2/1 Amala Singh <amalasingh@...>

          > இராசராச சோழரும், இராசேந்திர சோழரும் பாண்டிய நாட்டை இல்லாமல் செய்தது
          > வரலாற்றுத்தவறா? தமிழகம் அந்நியருக்கு அடிமையானது இங்கிருந்துதான்
          > ஆரம்பித்தது என்று சொன்னால் அது மிகையாகுமா?
          >
          > 2009/2/1 jay bee <jaybee011008@... <jaybee011008%40gmail.com>>:
          >
          > > அன்பர்களே,
          > >
          > > சென்ற மடலில் சூரைக்குடியில் பார்த்த இரண்டு
          > > பொட்டல்களில் ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன்.
          > > இன்னொன்றின் பெயர் 'சோலந்திக் கோட்டை'
          > > அல்லது 'சோலவந்திக் கோட்டை' என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
          > >
          > > இதற்குக் கொஞ்சம் பின்னணியைச் சொல்லவேண்டும்.
          > >
          > > சூரைக்குடி இருக்கும் பிரதேசம் வடபாண்டி
          > > மண்டலத்தில் இருக்கிறது.
          > > இந்தப் பிரதேசத்திற்குப் பெயர் ஐந்து நிலை நாடு.
          > > வழக்குத் தமிழில் அஞ்சல்நாடு அல்லது அஞ்சலநாடு
          > > என்பார்கள். ஐந்து மங்கலம் என்றும் பெயருண்டு.
          > >
          > > பழங்காலத்தில் ஒரு தேசத்தை மண்டலங்களாகப்
          > > பிரித்திருப்பார்கள். மண்டலங்களை வளநாடுகளாகப்
          > > பிரித்தார்கள். வளநாடு என்பது ஒரு மாகாணம் போன்றது.
          > > ஒரு வளநாட்டில் உட்பிரிவுகள் உண்டு. அவற்றை
          > > 'நாடு' என்பார்கள். நாட்டின் உட்பிரிவுகள் ஊர், கிராமம்,
          > > புரம் போன்றவை.
          > > பிராம்மணர்கள் இருக்கும் ஊர்களைச் சதுர்வேத
          > > மங்கலம் என்றோ அகரம் என்றோ குறிப்பிட்டார்கள்.
          > > சில ஊர்கள் அடங்கிய சற்றுப் பெரிய பிரதேசத்தை
          > > 'பிரம்ம தேசம்' என்றார்கள். இவையெல்லாம் பிராம்மணர்களுக்குத்
          > > தானமாகக் கொடுக்கப்பட்டவை. வரியில்லாதவை.
          > > வைசியர்கள் வசித்த ஊர்களை 'நகரம்' என்பார்கள்.
          > > 'பட்டினம்' என்பது கடற்கரையில் இருக்கும். வைசியர்களின்
          > > ஊர்களில் சிலவற்றைப் பட்டினம் என்றார்கள்.
          > > ஒவ்வொன்றுக்கும் நிர்வாகக் குழு, நாட்டாண்மைக் குழு
          > > இருந்தது. நிர்வாகத்தைச் செய்வதற்கென்று வாரியங்கள்
          > > இருந்தன.
          > > இவை தவிர 'நிலைப்புறம்' என்ற பிரதேசங்களும்
          > > இருந்தன.
          > > இவற்றில் போர் புரியும் குடியினர் வாழ்ந்தனர்.
          > > நிலைப்புறத்தில் உள்ள முக்கியமான பெரிய ஊர்
          > > 'நிலை' எனப்பட்டது.
          > > இவையெல்லாம் பழங்காலத்துப் பாண்டியர்கள்
          > > ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை.
          > > நிலைப்புறத்தில் பல கோட்டைகள் இருந்தன.
          > > இன்று சிங்கம்புணரி என்ற பெயரைக் கொண்டுள்ள
          > > ஊர் இந்த ஐந்துநிலை நாட்டின் முக்கிய ஊர். தலைமையகம்.
          > > பழங்காலத்தில் அதன் பெயர் 'வேள்குலராம நிலையான
          > > வீரபாண்டிய நல்லூர்'.
          > > பாண்டியர்கள் ஐந்து கிளைகளாக இருந்து பாண்டிய
          > > நாட்டை ஆங்காங்கு இருந்து ஆண்டுவந்தார்கள் என்று
          > > அடிக்கடி அகத்தியத்தில் எழுதியிருக்கிறேன்.
          > > சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், பராக்கிரம
          > > பாண்டியன், விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன்
          > > என்ற ஐந்து பெயர்களில் அவர்கள் ஆண்டார்கள்.
          > > இவை அவர்களுக்குரிய அபிஷேகநாமங்கள். ஜடாவர்மன்,
          > > மாறவர்மன் என்ற பட்டப்பெயர்களை இந்த பெயர்களின்
          > > முன் சூட்டிக்கொள்வார்கள்.
          > > இந்த ஐந்து பாண்டியர்களின் பெயரால் ஐந்து
          > > நிலைகள் இருந்தன.
          > > என்னால் இரண்டு நிலைகளை அடையாளம்
          > > காணமுடிந்தது.
          > > ராஜராஜ சோழர் பாண்டியநாட்டைப் பிடித்துக்
          > > கொண்ட பின்னரும் பாண்டியர்கள் ஆங்காங்கு இருந்து
          > > போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.
          > > ராஜேந்திர சோழர் காலத்தில் அசல் பாண்டியர்களை
          > > அடக்கி ஒடுக்கிவிட்டார்.
          > > அவர்களின் குலத்தையும் பாண்டியநாட்டு அரச
          > > பீடத்திலிருந்து அகற்றிவிட்டார். சிற்றரசராக இருக்கக்கூட
          > > அருகதை இல்லாமற் போய்விட்டது.
          > > புதியதொரு பாண்டிய பரம்பரையை அவர்
          > > தோற்றுவித்தார்.
          > > 'சோழபாண்டியர்' என்ற பெயரில் அவர்கள் மதுரையை ஆண்டனர்.
          > > அவர்கள் எல்லாம் ராஜேந்திர சோழரின் வாரிசுகள்தாம்.
          > > பாண்டியநாட்டிலுள்ள பெயர்களையும் மாற்றினார்.
          > > பாண்டியநாடு 'ராஜராஜ பாண்டிய நாடு' ஆகியது.
          > > ஐந்து நிலை நாடு இருந்த மாகாணத்தின் பெயர்
          > > கேரளசிங்க வளநாடு. அதை 'ராஜேந்திர சோழ வள நாடு'
          > > என்று பெயர் மாற்றம் செய்தனர்.
          > > குந்தவைப் பேரேரி, கரிகால் சோழன் வாய்க்கால் என்று
          > > அனைத்துமே பெயர் மாற்றம் பெற்றன.
          > > 'Choliyanisation'.
          > > ஐந்துநிலை நாட்டின் நிலைப்புறங்களில் முக்கியமானதை
          > > 'சோழபாண்டிய நிலைப்புறம்' என்று அழைத்தார்கள்.
          > > கோட்டைகளில் முக்கியமானதாக இருந்த ஒன்று
          > > 'சோழபாண்டிய நிலை' ஆகியது.
          > > ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 'சோழபாண்டியக்
          > > கோட்டை' இருந்த இடம்தான் நாற்பது ஆண்டுகளுக்கு
          > > முன்னர் சோலவந்திக் கோட்டைப் பொட்டலாக விளங்கியது.
          > >
          > > அன்புடன்
          > >
          > > ஜெயபாரதி
          > >
          > > ===================================
          > >
          > > [Non-text portions of this message have been removed]
          > >
          > >
          >
          > --
          > --
          > Nandri,
          > Amala Singh
          >
          >



          --
          http://www.poetryinstone.in
          Here the language of stone surpasses the language of man


          [Non-text portions of this message have been removed]
        Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.