Loading ...
Sorry, an error occurred while loading the content.

KallinuL Iiram -#4 (unicode)

Expand Messages
  • jaybee555
    அன்பர்களே, போதைப்
    Message 1 of 1 , Oct 1, 2008
    • 0 Attachment
      அன்பர்களே,

      போதைப் பித்தர்களைப் பரிசோதிப்பது பற்றி
      சொல்லிக்கொண்டிருந்தேன்.
      அவர்களில் சிலர் காலிகளாகவும் குண்டர்களாகவும்
      இருப்பார்கள். பெண்பித்துப் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
      அந்த மாதிரி தன்மை படைத்தவர்களில் சிலர் தங்களின்
      ஆண்குறியின் தண்டுப் பகுதிக்குள் சிறு சிறு கண்ணாடிக்
      குண்டுகளைப் பதித்திருப்பார்கள். அந்தக் குண்டுகள்
      பாசிமணியைப் போல இருக்கும். இரண்டு மில்லிமீட்டர்
      அளவே இருக்கும். மேல் தோலைக் கீறி விட்டுக்கொள்வார்கள்.
      அந்தக் கீறலுக்குள் அந்த சிறிய கண்ணாடிக் குண்டுகளைத்
      திணித்துவிடுவார்கள். மேலே à®'ற்றைத் தையல். ஆறிய பிறகு
      முடிச்சு முடிச்சாக விளங்கும். à®'ன்று அல்லது அதற்கும் மேல்
      அந்த முடிச்சுகளை வைத்திருப்பார்கள்.
      புணர்ச்சியின்போது அடக்கமுடியாத வெறியை அந்த
      முடிச்சுகள், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு உண்டு பண்ணும்.
      இந்த மாதிரி முடிச்சு உள்ளவர்களுக்கு உடனடியாக
      அறுவை சிகிச்சை செய்து முடிச்சை அகற்றிவிடவேண்டும்.
      இப்படியெல்லாம் வழக்கங்கள் இருக்கின்றன என்பதைக்
      கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது.
      à®'ரு டீவீ விளம்பரத்தில் வரும் கம்பத்து மலாய்க்காரக்
      கிழவனார் சொல்வது போல "மாச்சாம் மாச்சாம் பொங் ஆடஅஅஅ.......!"
      மலேசியாவில் வாழும் தமிழர்களில் பலர் "இதென்னடாது
      மலாயை இவர் வேறு மாதிரியாக எழுதியிருக்கிறாரே?" என்று
      நினைப்பார்கள். அப்படியும் சில இடங்களில் பேச்சுவழக்கு
      இருக்கிறது.

      அடுத்து.......

      அன்புடன்

      ஜெயபாரதி
    Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.