Loading ...
Sorry, an error occurred while loading the content.
 

Fw: [agathiyar] UyirE.... -#9 (unicode)

Expand Messages
 • v.subramaniyan
  ஐயா வணக்கம்.நலம் நலமே நாடுகிறேன். இந்தப் படம் பல முறை
  Message 1 of 1 , Mar 31, 2008
   ஐயா வணக்கம்.நலம் நலமே நாடுகிறேன்.
   இந்தப் படம் பல முறை வெவ்வேறு பெயர்க
   ளில் வெளியிடப்பட்டுள்ளது. அப்போது புரிந்து கொள்ள முடியாத பல விளக்கங்கள்
   தபோது கிடைத்துள்ளதால் அந்த முழு நீளப்படமும் ஒரு முறை மனதில் ஓடி நின்றது.

   ஒரே உருக்கொண்ட இருவர் ஒருவரை ஒருவர் மூர்க்கமாக அடித்துக் கொண்டது மட்டும்
   தான் அப்போது புரியாமல் இருந்தது.
   நன்றி வணக்கம். வெ.சுப்பிரமணியன் ஓம்.


   -------Original Message-------

   From: jaybee555
   Date: 4/1/2008 5:54:47 AM
   To: agathiyar@yahoogroups.com
   Subject: [agathiyar] UyirE.... -#9 (unicode)


   அன்பர்களே,

   சென்ற மடலில் எழுதிய ·ப்ராங்கென்ஷ்டைனின் சிருஷ்டி
   பற்றிய கதையை உண்மையென்று நினைத்துக் கொண்டு
   'ஒரு சிலராவது படித்திருப்பீர்கள்.

   அது முற்றிலும் கற்பனைக் கதை.

   அதை எழுதியவர் மேரி ஷெல்லி.
   ஷெல்லி என்னும் ஆங்கிலக் கவிஞரை உங்களில்
   சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.
   இப்போதெல்லாம் யார் ஷெல்லியின் கவிதைகளைப்
   படிக்கப்போகிறார்கள்? எல்லாம் தமிழில் உள்ள
   புதுக்கவிதைகள்தாம்.
   அதனால்தான் புதுக்கவிஞர்கள் "ஹோ என்று புகழ்
   பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்.
   ஆங்கிலத்தில் ஏதோ ஒன்றிரண்டு ஹைக்கூ கவிதைகளைச்
   சிலர் படிக்கிறார்கள்.

   ஷெல்லியின் மனைவிதான் மேரி ஷெல்லி.
   நல்ல இலக்கிய மரபு உள்ள குடும்பம்.
   ஷெல்லி தம்பதியினரின் நெருங்கிய நண்பர் லார்ட்
   பைரன்.
   இவரும் ஒரு பெருங்கவிஞர்.
   ஒரு முறை பைரன் மேரியிடம் ஒரு சவாலை
   விட்டிருக்கிறார்.

   ஒரு நல்ல பேய்க் கதை எழுத முடியுமா?

   இந்த இடத்தில் 'நல்ல' என்பது பேயைக் குறிக்காது.
   பேய்க் கதையைச் சொன்னேன்.

   பேய்களில் நல்ல பேய்களும் உண்டு.
   சத்தியப்பிரமாணங்களுக்கும் மந்திரங்களுக்கும்
   கட்டுப்
   படும். கொடுத்த வாக்கையும் பெரும்பாலும் மீறமாட்டாது.

   மனிதர்கள் அப்படியில்லை.
   அதுவும் இணையத்தில் உள்ள பலர்......?
   பேய்களுடன் அவர்களை ஒப்பிடுவதுகூட பேய்களுக்கு
   நான் செய்யும் பெருந்துரோகம்.

   அந்த சவாலை ஏற்றுக்கொண்ட மேரி முற்றிலும் புதிதான
   Plot-ஐக் கொண்ட கதையை எழுத ஆரம்பித்தார்.
   அந்தக் கதையை எழுத ஆரம்பிக்கும்போது அவருக்கு
   வயது பதினெட்டுதான்.
   தம்முடைய இருபத்தோராவது வயதில் அவர் அந்தக்
   கதையை வெளியிட்டு விட்டார்.

   அந்தக் கதைக்கு அவர் இட்ட பெயர் 'Frankenstein'
   அல்லது 'The Prometheus Man'.

   இந்த ப்ரோமெதியஸ் என்பவன் கிரேக்கப் புராணத்தில்
   காணப்படும் ஒரு ஆசாமி.
   Titans எனப்படும் ஒரு வகை தேவன்.
   அசுரன் என்றும் சொல்லலாம்.
   தேவர்களுக்கு உரிய பலமும் வல்லமையும் பெற்றவர்கள்
   டைட்டன்கள். டைட்டானிக் என்ற கப்பலின் பெயர்கூட
   டைட்டன்களின் பெயரிலிருந்து ஏற்பட்டதுதான்.

   இந்து சமயப் புராணங்களிலும் தேவர்களுக்கும்
   அசுரர்களுக்கும்
   என்ன வித்தியாசம்?
   'ரே அப்பா. காஸ்யபர். தாய்தான் வேறு - அதிதி, திதி,
   விநதை என்று பல மாதிரியாக.
   திதியின் புத்திரர்கள் தைத்யர். அசுரர்களுக்கு
   அப்படியும்
   பெயருண்டு.
   தேவர்களின் அரசனாகிய தேவேந்திரனை விட ஒரு
   எவரேஜ் அசுரன் நல்லவனாக இருப்பான்.
   எவ்வளவுதான் நல்லவனாக வல்லவனாக இருந்தாலும்
   தேவர்களை ஏதாவது செய்தால் அசுரர்களுக்கு ஆபத்து வரும்.
   அதுவும் தேவேந்திர பதவியை மட்டும் பிடித்துவிடக்கூடாது.

   சரி. கதைக்கு வருவோம்.
   ப்ரோமேதியஸ் கதை இரண்டு வகைப்படும்.
   அதில் இரண்டாவது கதையைச் சொல்கிறேன்.
   அவன் சும்மாயிருக்க மாட்டாமல் களிமண்ணை எடுத்து,
   மனித உருவத்தைச் செய்து, அதற்கு உயிரூட்டி மனிதனைப்
   படைத்தான்.
   தேவ லோகத்திலிருந்து நெருப்பைத் திருடிக்கொண்டு
   வந்து மனிதர்களிடம் கொடுத்துவிட்டான்.
   அதனால் தெய்வங்களின் தலைவராகிய ஸியுஸ் கோபம்
   கொண்டு அவனைக் கடுமையாக தண்டித்துவிட்டார்.

   ப்ரோமெதியஸ் போலவே விக்டர் ·ப்ராங்கென்ஷ்டைன்
   தானும் புதிய மனிதனைச் சிருஷ்டி செய்ததால் அந்தப் பெயரை
   மேரி ஷெல்லி கொடுத்தார்.
   ஆனால் ஒரு வித்தியாசம். ப்ரோமெதியஸ்
   களிமண்ணிலிருந்து
   மனிதனைப் படைத்தான்.
   விக்டர் பிணங்களின் பாகங்களை இணைத்து
   உருவாக்கினான்.
   சுங்கைப் பட்டாணி ஒரு குறிப்பிட்ட காரணத்தால்
   மிகவும் பிரபலமானது.
   இங்கு பழைய இரும்புச்சாமான் கடைகள் அதிகம்.
   பெரும் பெரும் கடைகள்.
   அவற்றில் கார்களை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி
   வைத்து 'ஸ்பேர் பார்ட்'டாக விற்பார்கள்.
   அந்தக் கார்ப் பகுதிகளை வாங்கிப் பொருத்தியே ஒரு
   புதிய
   காரைத் தயாரித்துவிடலாம்.
   அப்படித்தான் விக்டர் ·ப்ராங்கென்ஷ்டைனும்
   செய்திருக்கிறான்.
   இந்த நாவல் நூற்றைம்பது ஆண்டுகளாக மக்களால்
   விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது.
   English Classics என்ற உயரிய அந்தஸ்துடன் ஆங்கில
   இலக்கியத்தில் இடம் பெற்றது.
   மேரியின் காலத்தில் இப்போதுள்ள Cryogenics, Life
   Support
   System, Space Travel Support System, Intensive Care - Coronary
   Care போன்ற உயிர்க் காப்பு முறைகள் ஏதும் இல்லை.
   அதையெல்லாம் கற்பனை செய்துகூட
   பார்த்திருக்கமாட்டார்கள்.

   அந்தக் காலகட்டத்தில்தான் மேரி ஷெல்லி
   இப்படிப்பட்ட
   அற்புதமான நாவலை எழுதினார்.
   ஒரு Glitch.
   அந்த செயற்கை மனிதனைச் சிருஷ்டி செய்தவன்தான்
   ·ப்ராங்கென்ஷ்டைன்.
   ஆனால் வழக்கத்தில் அந்தச் செயற்கை மனிதனைத்தான்
   ·ப்ராங்கென்ஷ்டைன் என்று குறிப்பிடுகிறார்கள்.

   அன்புடன்

   ஜெயபாரதி


   [Non-text portions of this message have been removed]
  Your message has been successfully submitted and would be delivered to recipients shortly.