Loading ...
Sorry, an error occurred while loading the content.

54755Re: [agathiyar] AGATHIYAR GROUP BEGINS THE SEVENTEENTH YEAR(Tamil unicode)

Expand Messages
  • Narayan Swaminathan
    Aug 2, 2014
    • 0 Attachment
      இப்பொழுதுதான் தொடங்கியதுபோல் இருக்கிறது.
      பதினேழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அகத்தியக்குழுவுக்கு என் வாழ்த்துகள்.


      சுவாமிநாதன்
      லாஸ் ஏஞ்சலஸ்


      On Saturday, August 2, 2014 6:42 PM, "jay bee jaybee555@... [agathiyar]" <agathiyar@yahoogroups.com> wrote:


       
      அன்பர்களே,|

      இன்று ஆடிப்பெருக்கு - ஆடி பதினெட்டாம் நாள். 
      அகத்தியர் மடற்குழு ஆரம்பித்துப் பதினாறு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன.
      இன்று பதினேழாம் ஆண்டின் தொடக்கம். 

      இந்த மடல் 54754-ஆவது மடல். 

      இதை முன்னிட்டு சில நினவுகூர்தல்களுக்கு இடமளிக்க நினைத்தேன். புதியவர்கள் பலருக்கு சுவாரஸ்யமாக இருக்கும். 
      முதலில் அகத்தியர் குழுவின் முதலாம் ஆண்டு நிறைவு மடல்களில் ஒன்றை இடுகின்றேன். |

      >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
      From: jaybee <jaybee@...>
      Date: Tue Aug 3, 1999  8:38 am
      Subject: [agathiyar] aadip perukku jaybee@...
      அன்பர்களே,

      ஆடி பதினெட்டாம் நாளன்று "ஆடிப் பெருக்கு" என்னும் விழா நடைபெறும்.
      இந்த சமயத்தில் "அகத்தியர்" என்னும் விண்மீன் உதயமாகும்.
      இதனை "Canopus" என்று சொல்வார்கள்.
      இசசமயத்தை ஒட்டி மலைப்பகுதிகளில் மழைபெய்யும். அந்தப் புதுமழை,
      தமிழகத்தின் ஆறுகளில் புதுவெள்ளத்தைக் கொண்டுவரும். முக்கியமாக
      மேலைத்தொடர் மலைகளிலும் மைசூர் பீடபூமிப் பகுதிகளிலும் பெய்யும்
      மழை, காவேரியில் வெள்ளத்தை ஏற்படுத்தும்.
      இந்த வெள்ளம் தமிழக சமுதாய வாழ்வியலில் மிக முக்கியமானது.
      "சோழநாடு சோறுடைத்து" என்பது ஔவையின் வாக்கு. அந்தப் பிராட்டி,
      அவளுக்குமுன்னர் எத்தனை தலைமுறையாக வழங்கிய பழமொழியைச்
      சொன்னாளோ? யார்கண்டது?
      இந்தப் புதுவெள்ளம் நிறைய வண்டலை அடித்துக் கொண்டுவந்து
      சேர்க்கும். அதனால் சோழநாட்டின் டெல்ட்டாப்பிரதேசம் எப்போதும்
      வளமையுடன் திகழும். விதவித உரங்கள் இஇல்லாத ஈராயிரம் ஆண்டுகளுக்கு
      முன்னரேயே, சோழநாட்டின் வயல்களில் ஒரு யானை படுக்கும் இடத்தின்
      பரப்பளவேயுள்ள நிலம் ஏழு பேருக்கு ஓராண்டுக்குப் போதுமான நெல்லை
      விளைவிக்குமாம். சங்கப்பாடல் சொல்கிறது.
      மிகப்பழமையானதொரு காலகட்டத்தில் "வராகி" என்னும் தேவியை
      வழிபட்டிருக்கிறார்கள். இஇவள் உழவுக்கும் விளைச்சலுக்கும் பூமிக்கும்
      உரிய தேவதையாக விளங்கினாள். ஆடி மாதத்தில் இஇவளைச்
      சிறப்பாக வழிபட்டிருக்கிறார்கள். ஆடிமாதமே இஇவளுக்கு உரியதுதான்.
      ஆடியில் இவளுக்கென்று ஒரு நவராத்திரியைக் கொண்டாடினார்கள்.
      வராகிக்கு தஞ்சைப் பெரிய கோயிலில் ஒரு சன்னிதி
      இருக்கிறது. இந்த சன்னிதி, தஞ்சையின் பெரிய கோயிலை ராஜராஜ
      சோழர் கட்டுமுன்னரேயே அங்கு இஇருந்ததாகச் சொல்வார்கள்.
      இஇவளைப் பற்றி சில மர்மமான, விசித்திரமான, ஆச்சரியமான
      தகவல்களைச் சொல்வார்கள்.
      ஆடி ஒரு புனிதமான மாதம். இஇந்த மாதத்தில் பதினெட்டு
      புனிதமான நாட்கள் இஇருக்கின்றன. ஆடிவெள்ளி, ஆடிச்செவ்வாய்,
      ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, குரு பௌர்ணமி,
      பதினெட்டாம்பெருக்கு போன்றவை அவை.
      "ஆடிப்பட்டம் தேடி விதைக்கவேண்டும்" என்பது விவசாயத்தில்
      வழங்கும் மொழி.
      ஒரு விசித்திரம் என்னவென்றால், "அகத்தியம்" என்னும் விண்மீன்
      உதயமாகும் சமயத்தில்தான் எகிப்தில் நைல் நதியிலும் புதுவெள்ளம்
      ஓடும். யுகாண்டா, சூடான், எதியோப்பியா ஆகிய நாட்டு மலைகளில்
      பெய்யும் மழைகளின் காரணமாக இஇந்தப் புது வெள்ளம் ஏற்படும்.
      அந்த மலைக்காடுகளின் வண்டலை அடித்துக்கொண்டு நீர் வரும்.
      இஇது நைலின் டெல்ட்டாப் பிரதேசத்தை வளப்படுத்தும்.
      பண்டைய எகிப்தியர்கள் இஇதனை - அகத்தியரின் உதயத்தையும்
      நைலின் புதுவெள்ளப்பெருக்கையும் - விழாவாகக் கொண்டாடியிருக்கின்றனர்.

      அன்புடன்

      ஜெயபாரதி

      அன்பர்களே,

      இன்று ஆடி மாதம் பதினெட்டாம் நாள். 'ஆடிப்பெருக்கு' என்று
      இன்றைய தினத்தை அழைப்பார்கள்.
      இவ்வாண்டு இது மிகுந்த விசேடத்தன்மையுடன் விளங்குகிறது.
      ஆடி வெள்ளிக்கிழமையுடன் பௌர்ணமியும் ஆடிப்பெருக்குடன் சேர்ந்து
      கொண்டுள்ளது.
      சில நூறாண்டுகளுக்கு ஒருமுறை இம்மாதிரியான இணைப்பு
      ஏற்படும். தோராயமாக இருநூற்றுப்பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி
      ஏற்படக்கூடும்.

      இன்னொரு விசேடமும் உண்டு.

      முதன்முதலில் அகஸ்த்யா@அகத்தியம் என்னும் மடற்குழு தோன்றியதும்
      இந்நாளில்தான்.
      1998-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாததில் திகழ்ந்த ஆடிப்பெருக்கு
      அன்றுதான் இம்மடற்குழு சில இலட்சியங்களுக்காகத் துவக்கப்பட்டது.
      அப்போது அதற்கென சில கொள்கைகளை வகுத்து வெளியிட்டோம்.
      முதன்முதலில் இட்ட பெயர் 'Agasthya'. 29 பேர்களுடனேயே அது
      ஆரம்பிக்கப்பட்டது.
      முதலில் Coollist.com என்னும் வலைத்தளத்தில் இருந்தது.
      ஆனால் அதில் சில பிரச்னைகள் இருந்தன. ஆகவே வேறிடத்திற்கு மாற்ற
      முடிவுசெய்தோம்.
      அவ்வாறு முடிவுசெய்து தேடிப்பிடித்துக் கண்டெடுத்த இடம்தான்
      Egroups.com. இதில் archiving போன்ற பல வசதிகள் இருப்பதைக்
      கண்டோம்.
      1998-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இதனை Egroups-ஸ¤க்கு
      மாற்றினோம்.
      பெயரையும் 'அகத்தியர்' என்று மாற்றம் செய்து, கொள்கைகளிலும்
      சிறு மாற்றங்கள் செய்தோம்.
      இத்தளங்களை அமைப்பதில் 'சுமன்' என்ற பெங்களூர் சுப்பிரமணியன்
      ஆற்றிய தொண்டு மிகப் பெரியது.
      நான்காண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மடல்கள் அடங்கிய
      பெரிய தகவல் தளமாக இன்று திகழ்கிறது.
      முதன்முதலில் அகஸ்தியருக்காக எழுதப்பட்ட பழைய 'Manifesto'வை
      கீழே காணலாம். Of Historical Interest:-)
      அனைவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்.

      அன்புடன்

      ஜெயபாரதி

      ----------------------Forwarded - Manifesto---------

      அன்புள்ள நண்பர்களே!

      "அகஸ்த்யா" என்னும் இந்தத் தகவல் பா¢மாற்றக்குழு ஒரு
      விசேடத்தன்மை வாய்ந்தது.
      இதில் சமயம், வரலாறு, கலைகள், கலாசாரம், இலக்கியம்,
      தமிழியம் ஆகியவை அங்கம் பெற்றிருக்கும்.

      1. சமயம்: இந்தத் தலைப்பில் "இந்து" என்ற பெயா¢ல்
      தற்சமயம் விளங்கும் அறுசமயக்கூட்டு, அதன் கோட்பாடுகள்,
      இலக்கியங்கள், ஆகியவை இடம் பெறும்.

      2. கலாச்சாரம்: பாரதக்கலாச்சாரம் - பெருமளவில்
      தமிழ்க்கலாச்சாரம் விளங்கும்.

      3. கலைகள்: அறிவியல் கலைகள், நுண்கலைகள்,
      நுகர்ச்சிக்கலைகள், ஆகியவை மையம் பெறும்.

      4. இலக்கியம்: நல்ல பழந்தமிழ் இலக்கியங்கள், பெருமளவில்
      மிகவிரைவாக மறைந்துபோய்க்கொண்டிருக்கின்றன. அவற்றைப்பற்றிய
      தகவல்கள் பா¢மாறப்படும். தரமான பிறமொழி இலக்கியங்களும் இங்கு
      பேசப்படும்.

      5. வரலாறு: பாரத வரலாறு - குறிப்பாகத் தமிழர் வரலாறு.

      6. தமிழியம்: 'நாம் தமிழர்' என்ற உணர்வு முன்வைக்கப்பட்ட,
      தமிழர் சம்பந்தப்பட்ட தகவல் மையம்.

      தமிழிலும் ஆங்கிலத்திலும் கருத்துப்பா¢மாற்றங்கள் நிகழ்த்தப்படும்.
      நியாயமான ஐயப்பாடுகள், கேள்விகள் இருப்பின் அவற்றிற்கு விளக்கம்
      காண முயலப்படும்.
      இந்தக்குழு குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.
      ஆகவே இதற்கென சில கட்டொழுங்குகள், வரம்புகள்முதலியன
      கடைபிடிக்கப்பட வேண்டியுள்ளன.

      இந்தக்குழுவின் Web-masterஆக தற்சமயத்துக்கு நான் இயங்கி
      வருவேன். அங்கத்துவம் பெறவிழைவோர் நேரடியாக என்னிடம்
      விண்ணப்பிக்க வேண்டும்.

      H-ASIA, RISA List, Astronomy, History of Medicine and
      Technology, HISTARCH, போன்ற விசேடக்குழுக்களின் முறையை இங்கும்
      கடைபிடிக்கிறோம். அதன்படி, விண்ணப்பிப்போர், தங்களைப்பற்றிய சில
      தகவல்களை அனுப்பவேண்டும். இந்தத் தகவல்கள் பாதுகாக்கப்பட்டவையாக
      விளங்கும்.

      தற்சமயம் coollist.com.இல் விளங்கும் இந்தக்குழு, தகுந்த
      சர்வர் வாய்த்ததும் அங்கு மாற்றப்பட்டுவிடும்.

      இதுவும் ஒரு Global Networkதான்.
      ஆனால், மிகச்சிறியது; கட்டைவிரல் பா¢மாணமே உடையது.

      அன்புடன்

      ஜெயபாரதி

      பி.கு. தற்சமயம் உலகில் உள்ள மற்ற இணையக்குழுக்களில்
      மேற்கூறிய விஷயங்கள் போதுமான அளவில் இடம்பெறுவதில்லை.
      அப்படியே எழுதினாலும் ஆதரவு போதுமானதாக இல்லை. ஆகவேதான்
      இந்த அ¡¢ய விஷயங்களுக்கென தனிப்பட சிறப்பு தகவற்குழுமம் அமைக்கும்
      நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

      அவற்றிற்கு¡¢ய மா¢யாதையுடன் அவையும் சிறப்பாக பூஜ்யவெளியில்
      இடம்பெற்று, உலகில் பரவவேண்டும் அல்லவா?

      தமிழ்மொழியின் முதல்வர், சித்தர்களின் தலைவர், ¡¢ஷிகளில்
      சிறப்புவாய்ந்தவர், சக்திவழிபாட்டின் ஒரு மரபின் முதல்வராக விளங்கும்
      குறுமுனியின் பெயா¢ல் "அகஸ்த்யா" என்று பெயா¢ட்டுள்ளேன்.

      ஆகஸ்ட் மாதத்தில் இந்தக்குழுமம் தோன்றியுள்ளது. இந்த
      மாதத்தில்தான் 'அகஸ்தியர்' என்னும் நட்சத்திரம் (Canopus) சூ¡¢யன்
      மறையும்போது அடிவானத்தில் தோன்றும். அப்போதுதான் புதுவெள்ளம் ஓடும்.

      காவி¡¢யிலும்தான், வைகையிலும்தான், தாமிரவருணியிலும்தான்.
      மேற்குமலையில் அகஸ்தியா¢ன் கமண்டலத்தை விநாயகப்பெருமான்
      கவிழ்த்துவிடவில்லையா?

      அதுமட்டுமல்ல!

      நைல்நதிக்கரையிலும்தான். ஆம். அவர்களும் அதனைக் -
      பதினெட்டாம்பெருக்கை - கொண்டாடியிருக்கின்றனர்.

      ஜேய்பி

      பி.கு: மேற்கூறிய விஷயங்களில் உங்களின் கருத்துக்களைக்
      கூறுங்கள். பிறகு லிஸ்ட்டை இயங்கச்செய்துவிடலாம். அத்துடன் யாரையும்
      சேர்க்கவேண்டுமென்றாலும் தனிப்பட எனக்குச்செய்தி அனுப்புங்கள்.

      >>>>>>>>>>>>>>>>>>>>|

      நீளமான மடல்தான்.|
      :-)

      அன்புடன்

      ஜெயபாரதி


    • Show all 4 messages in this topic