Search the web
Sign In
New User? Sign Up
RaayarKaapiKlub · Thamizhk kalai ilakkiya aarvalarkaLukku
? Already a member? Sign in to Yahoo!

Yahoo! Groups Tips

Did you know...
Hear how Yahoo! Groups has changed the lives of others. Take me there.

Best of Y! Groups

   Check them out and nominate your group.
Having problems with message search? Fill out this form to ensure your group is one of the first to be migrated to the new message search system.

Messages

  Messages Help
Advanced
ஒரு துப்பாக்கியின் பெய‌ர   Message List  
Reply | Forward Message #12910 of 12942 |
மீண்டும் சில கவிதைகள்.
உயிர்மை.காம்மின்(uyirmmai.com)
"உயிரோசையில்"
வெளியானவை. நான் ரொமாண்டிக் ஆக
மாறுவதற்கு சற்று முன்பாக
எழுதிய கவிதைகள் இவை
:)

* *

பிரியத்துடன்,
வா.மணிகண்டன்
** *ஓய்வெடுக்கும் கடவுள்*

முடிந்த பகலின் எச்சங்கள்
சிதறிக்கிடக்கும்
இந்த இரவில்
உறிஞ்ச வேண்டிய சிகரெட் ஒன்று
மிச்சமிருக்கிற‌து.
குப்பியில் தீராமலிருக்கிறது
கொஞ்சம் மது.
நீங்கள்
இரவொன்றை கொண்டாடாமல்
கழிக்கிறீர்கள்.
கணமொன்றை விசனத்தில்
தீர்க்கிறீர்கள்.
வினாடியின் நீட்சியை கவலையில்
தோய்க்கிறீர்கள்.
நானோ
தன் சூட்சுமங்களை
ஆணியில் அறைந்து
ஓய்வெடுக்கும்
கடவுளாகிறேன்.
மழையின் உற்சாகம் கரைந்து
கொண்டிருக்கும்
வெளியில்-
பிளாஸ்டிக் பாட்டிலில்
அடைத்துக் குலுக்கிய
நீராக தத்தளிக்கிறது.
நீங்கள் எது என்பீர்கள்
நான் தெரியாது என்பேன்.

*ஒரு துப்பாக்கியின் பெய‌ர்*

கெளசிக்
துப்பாக்கி
வாங்கியிருப்பதாகச்
சொன்னான்
இஸ்ரேலியத் தயாரிப்பான
அது
சமயத்தில்
நூற்றியிருபது குண்டுகளை
தேக்கிக் கொள்ளும்.
வினாடிக்கு
740 மீட்டர்
வேகத்தில்
குண்டு சீறும்.
மொத்த எடை
3100 கிராம்.
ஸ்ரீலதாவின்
குடும்பத்தை
தீர்க்கப் போகிறானாம்.
சிரித்தேன்.
'நீ_______' என்றான்.
அவன் சொன்னானா
நான் மறந்தேனா
என்பதில் பிரச்சினையில்லை.
இப்பொழுது
துப்பாக்கியின்
பெயர்
நினைவில் இல்லை.

*குண்டு வெடித்த
நகரத்திலிருந்து*

என் தட்டில் மீதமிருந்த
பிரியாணி
இன்று விற்கப்பட்ட
கடைசி பிரியாணியாகிறது
நான் தவறவிட்ட பேருந்து
நிறுத்தப்பட்ட
பேருந்துகளில் கடைசியாகிறது
சற்று முன்பாக கேட்ட ஓசை
வெடித்த
குண்டுகளில் கடைசியாக
இருக்கிறது
கூர்க்கா விசிலூதும் தெருவில்
இன்று
நாய்கள் மட்டுமே
விளையாடுகின்றன
விமானங்கள் பறந்து
கொண்டிருக்கும்
நகரத்தின் வானில்
ஒரு
பறவை மட்டும் பாய்கிறது
லாரிச் சத்தம் இல்லாத அதிசய
இரவின்
துவக்கத்தில்
பயந்து அடங்குகிறது ஊர்.
டி.வி. அணைந்த அறைக்குள்
எனக்கு
துணையிருக்கிறது
அவசரமாக
விழுங்கி முடித்த
பிரியாணி வாடை.

*மெளனத்தின் விஷம்*

நேற்று நிகழ்ந்த
மரணத்தையொத்திருக்கிறது
இந்த எதிர்பாராத மழை
இந்த எதிர்பாராத பிரியம்
இந்த இதழ் உலர்ந்த முத்தம்
இன்று நிகழும் கொலையை முடிவு
செய்கிறது
இந்த கோடையின் புழுக்கம்
இந்த இரவின் மெளனம்
இந்த கணத்தின் பதட்டம்
நாளை நிகழவிருக்கும்
தற்கொலையை உறுதியாக்குகிறது
இந்த சொல்லின் வன்மம்
இந்த மெளனத்தின் விஷம்
இந்த துரோகத்தின் சிரிப்பு


--
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com


[Non-text portions of this message have been removed]




Tue Sep 2, 2008 4:38 pm

kvmanikandan1
Offline Offline
Send Email Send Email

Forward
Message #12910 of 12942 |
Expand Messages Author Sort by Date

மீண்டும் சில கவிதைகள். உயிர்மை.கா்மன்(uyirmmai.com) "உயிோசயி்" ...
Vaa.Manikandan
kvmanikandan1
Offline Send Email
Sep 2, 2008
5:41 pm
Advanced

Copyright 2009 Yahoo! Inc. All rights reserved.
Privacy Policy - Terms of Service - Guidelines - Help