நான் எழுதிய 'யாத்தி' என்ற
சிறுகதை ஜனவரி 2008 'யுகமாயினி'
என்ற மாத இதழில் பிரசுரம் ஆனது.
இந்தச் சிறுகதை 'இலக்கியச்
சிந்தனை' அமைப்பால் அந்த
மாதத்தின் சிறந்த
சிறுகதையாகத் தேர்வு
செய்யப்பட்டுள்ளது என்பதை
உங்களுடன்
பகிர்ந்துகொள்கிறேன்..
சென்ற வருடம் சென்னையில்
இருந்து வெளியாகும்
'யுகமாயினி' என்ற மாத இதழுக்காக
தோழி(சிங்கப்பூரின் சிறந்த
எழுத்தாளர்)ஜெயந்திசங்கர்
அவர்கள் கேட்டு,அவர்களின்
மூலமாக யாத்தி கதையை அனுப்பி
வைத்தேன். இவ்வேளை
ஜெயந்திக்கு என் நன்றி.
நான் இதை சற்றும் எதிர்
பார்க்கவேயில்லை.எழுத்துலகில\
எவ்வளோவோ சிறந்தவர்கள்
இருக்கிறார்கள். அவர்களுக்கு
இடையில் நான் ரொம்ப
சாதாரணமானவள் என் எழுத்திற்கு
இப்படியொரு பரிசா?!
நினைத்துக்கூட பார்க்கவில்லை
இன்னும் கூட நம்ப முடியவில்லை.
இதை முதலிலேயே சொல்லி
இருக்கலாம். நம் குழும
நண்பர்களான உங்களுடன்
பகிர்ந்து நீங்கள் என்ன
எண்ணுகிறீர்கள் என்று அறிந்து
கொள்ளும் ஆவலில் அதைக்
கூறாமலேயே இங்கு எடுத்துப்
போட்டேன்.மன்னியுங்கள் :)
இன்னொரு விஷயமும் உங்களுடன்
பகிர்ந்து கொள்ளவேண்டும்.
மலேசியாவில் (இந்தியாவின்
இந்த இலக்கிய சிந்தனைக்கான)
விருது இதுவரை மூவருக்கு
கிடைத்திருக்கிறது.1970ல் திரு
சி.முத்துசாமி அவர்களுக்கும்,
அதன் பின் சில வருடங்கள் முன்
நம் திரு ரே.கா
அவர்களுக்கும்,மூன்றாவதாக என்
கதைக்கும்(இந்த விபரங்கள்
திரு ரேகா அவர்கள்
சொல்லித்தான்
எனக்குத்தெரியும்!)இம்முறை
மலேசியாவிற்கு கிடைத்தது
மகிழ்ச்சி!
இலக்கிய சிந்தனை அமைப்பிற்கு
மலேசிய தமிழர்கள் சார்பில்
நன்றி.
நன்றி
-மீனாமுத்து
________________________________________________________________________________\
____
Be a better friend, newshound, and
know-it-all with Yahoo! Mobile. Try it now.
http://mobile.yahoo.com/;_ylt=Ahu06i62sR8HDtDypao8Wcj9tAcJ
[Non-text portions of this message have been removed]